எருசலேமின் வீழ்ச்சி
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதை முற்றுகைபோட்டார்கள். எசேக் 24:1-2எரே 52:4-72இராஜா 25:1-12சகரி 8:19 சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் நகரத்து மதில் உடைக்கப்பட்டது. 2இராஜா 25:3-4எசேக் 33:21எரே 5:10எரே 52:6-7மீகா 2:12-13செப்ப 1:10 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல் சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உள்ளே நுழைந்து, நடுவாசலில் இருந்தார்கள். எரே 21:4எரே 38:17எரே 1:15எரே 39:132இராஜா 17:30 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் எல்லாப் போர் வீர்களும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இரவு நேரத்தில் ராஜாவின் தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான். 2 நாளாக 32:5ஆமோ 2:142இராஜா 25:4-7உபா 28:25உபா 32:24-30எசேக் 12:12ஏசா 30:15-16எரே 38:18-20 ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவை நெருங்கி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான். 2இராஜா 23:33யோசு 5:10எரே 32:4-5எரே 38:18எரே 38:23எரே 52:26-27எரே 52:8-9யோசு 4:13 பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவில், சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டவைத்தான்; யூதாவின் பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி, எரே 52:102இராஜா 25:7உபா 28:34எரே 21:7எரே 24:8-10எரே 34:19-212 நாளாக 34:282இராஜா 22:20 சிதேக்கியாவின் கண்களைக்கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டான். எசேக் 12:132இராஜா 25:7நியாயாதி 16:21எரே 32:4-5எரே 52:11சங் 107:10-11சங் 119:8 கல்தேயர், ராஜாவின் அரண்மனையையும் மக்களின் வீடுகளையும் நெருப்பால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். நெகே 1:3எரே 21:10எரே 38:182இராஜா 25:9-10எரே 52:13-14மீகா 3:122 நாளாக 36:19ஆமோ 2:5 நகரத்தில் தங்கியிருந்த மக்களையும், தன்னிடத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற மக்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான். எரே 40:1ஆதி 37:362இராஜா 25:112இராஜா 25:20எரே 10:18எரே 52:262இராஜா 20:18உபா 4:27 காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்தில் வைத்து, அவர்களுக்கு அந்நாளில் திராட்சைத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான். 2இராஜா 25:12எரே 40:7எரே 52:16எசேக் 33:24 ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி: அப் 24:23எரே 15:21எரே 15:11எரே 37:2யோபு 5:19 நீ அவனை வரவழைத்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாகப் பார்த்து, அவன் உன்னுடன் சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து என்று கட்டளைகொடுத்தான். நீதி 16:7எரே 40:4நீதி 21:1சங் 105:14-151 பேது 3:12-13அப் 7:10ஆமோ 9:4எரே 24:6 அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும், எரே 39:3எரே 39:9 எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவதற்கு அவனைச் சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் மக்களுக்குள்ளே தங்கியிருந்தான். எரே 38:282இராஜா 22:122இராஜா 25:22-25எரே 26:24எரே 37:21எரே 38:13எரே 39:15எரே 40:1 இதுவுமல்லாமல், எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, அவனுக்குக் யெகோவாவால் உண்டான வசனம்: 2 தீமோ 2:9எரே 32:1-2எரே 36:1-5எரே 37:21எரே 39:14 நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரச்செய்வேன்; அவைகள் அந்நாளில் உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். தானி 9:12சகரி 1:62 நாளாக 36:21எரே 19:11-12எரே 21:7-10எரே 24:8-10எரே 26:15எரே 26:18 ஆனால் அந்நாளில் உன்னைத் தப்புவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனிதரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. சங் 41:1-2சங் 50:15சங் 91:14-152 சாமு 24:14எரே 1:19ஆதி 15:1எரே 38:92 தீமோ 1:16-18 உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்திற்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பி இருக்கிறதினால் உன் உயிர் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்றார். எரே 38:2சங் 34:22எரே 21:9எபே 1:12சங் 84:121 நாளாக 5:20சங் 147:11சங் 146:3-6