2 நாளாகமம் 36

2 Chronicles 36
அத்தியாயம் 36

யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்

அப்பொழுது மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பனுடைய இடத்திலே ராஜாவாக்கினார்கள். எரே 22:111 நாளாக 3:152 நாளாக 26:12 நாளாக 33:252இராஜா 23:30-37 யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான வரியைச் சுமத்தி, 2இராஜா 23:33 அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான். எரே 22:10-121 நாளாக 3:152இராஜா 23:34-35எசேக் 19:3-4

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம்

யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 2இராஜா 23:36-37எரே 22:13-19எரே 26:1எரே 26:21-23எரே 35:1எரே 36:1எரே 36:27-32 அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான். 2 நாளாக 33:112இராஜா 24:1-22இராஜா 24:13-202இராஜா 24:5-6தானி 1:1-2எசேக் 19:5-9ஆப 1:5-10எரே 25:9 யெகோவாவுடைய ஆலயத்தின் தட்டுமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளை பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான். 2இராஜா 24:13தானி 1:2தானி 5:2-4எஸ்றா 1:7-11எரே 27:16-18எரே 28:3 யோயாக்கீமுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோயாக்கீன் ராஜாவானான். 2இராஜா 24:5-61 நாளாக 3:16-17எரே 22:24எரே 22:28மத் 1:11-12

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீன்

யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எருசலேமில் அரசாண்டு, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான். 2இராஜா 24:8-17 அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், யெகோவாவுடைய ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரச்செய்து, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான். எரே 37:12 நாளாக 36:71 நாளாக 3:15-162 நாளாக 36:182இராஜா 24:10-172இராஜா 25:27-302 சாமு 11:1தானி 1:1-2

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு, 2இராஜா 24:18-20எரே 27:1எரே 28:1எரே 52:1-3 தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் யெகோவாவுடைய வார்த்தையைக் கூறிய எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. 2 நாளாக 33:23எரே 37:2-21எரே 38:14-281 பேது 5:62 நாளாக 32:262 நாளாக 33:122 நாளாக 33:192 நாளாக 35:22 தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான். 2 நாளாக 30:8எசேக் 17:11-20எரே 52:2-32இராஜா 17:42இராஜா 24:202 சாமு 21:2யாத் 8:15யாத் 8:32 ஆசாரியர்களில் முக்கியமான அனைவரும் மற்றும் மக்களும் கூடி புறவகைகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்செய்து, யெகோவா எருசலேமிலே பரிசுத்தம்செய்த அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். தானி 9:8எசேக் 22:62 நாளாக 28:32 நாளாக 33:4-72 நாளாக 33:92இராஜா 16:10-16தானி 9:6எசேக் 22:26-28

எருசலேமின் வீழ்ச்சி

அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய யெகோவா தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கனவே அனுப்பினார். எரே 35:15எரே 7:13எரே 25:3-42 நாளாக 24:18-21நியாயாதி 10:16எரே 26:5எரே 44:4-5எரே 7:25 ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், யெகோவாவுடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது. எரே 5:12-132 நாளாக 30:10லூக் 22:63-641 தெச 4:8எரே 32:3நீதி 6:15சங் 74:1எஸ்றா 5:12 ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரச்செய்தார்; அவன் அவர்களுடைய வாலிபர்களை அவர்களின் பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தால் கொன்று, வாலிபர்களையும் கன்னிப்பெண்களையும் முதியோர்களையும் நரைமுடி உள்ளவர்களையும் விட்டுவிடவில்லை; எல்லோரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். எஸ்றா 9:7சங் 74:20எசேக் 9:5-7எரே 40:32 நாளாக 24:212 நாளாக 33:112இராஜா 24:2-32இராஜா 25:1-30 அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 2 நாளாக 36:102 நாளாக 36:72இராஜா 20:13-172இராஜா 25:13-17தானி 5:3ஏசா 39:6எரே 27:18-22எரே 52:17-23 அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் மதிலை இடித்து, அதன் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த அழகான பொருட்களையெல்லாம் அழித்தார்கள். சங் 79:11 இராஜா 9:82இராஜா 25:9-11ஏசா 64:10-11எரே 52:13-15எரே 7:14எரே 7:4புலம் 4:1 பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா அரசாட்சி ஏற்படுத்தப்படும்வரை அங்கே அவர்கள் அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அடிமைகளாக இருந்தார்கள். எரே 27:7எஸ்றா 1:1-112 நாளாக 36:222இராஜா 25:11உபா 28:47-48 யெகோவா எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது. எரே 29:10லேவி 26:34-35தானி 9:2எரே 25:11-12சகரி 1:12லேவி 26:43லேவி 25:4-6எரே 25:9

எரேமியாவின் வாயினாலே யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேற, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். எரே 25:12எஸ்றா 1:1-3எரே 29:102 நாளாக 36:21ஏசா 44:28ஏசா 13:17-18எரே 33:10-14தானி 10:1 அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான். தானி 2:21தானி 2:37தானி 4:35தானி 5:23எஸ்றா 7:13ஏசா 44:26-28சங் 75:5-7ரோம 8:31