சங்கீதங்கள் 75

Psalms 75
சங்கீதம் 75

அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.

உம்மைத் துதிக்கிறோம், சங் 145:18எரே 10:6சங் 138:2உபா 4:7யாத் 23:21யாத் 34:6-7சங் 57:1சங் 76:1

தேவனே, உம்மைத் துதிக்கிறோம்;

உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது.

நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். பிரச 3:17அப் 17:31அப் 1:7யோவா 7:6சங் 102:132 சாமு 2:42 சாமு 23:3-42 சாமு 5:3

பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; 1 சாமு 2:8ஏசா 24:19எபி 1:3ஏசா 49:81 சாமு 18:71 சாமு 25:281 சாமு 31:1-72 சாமு 5:2

அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)

வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; சகரி 1:21நீதி 1:22நீதி 8:5சங் 148:14சங் 82:2-8சங் 89:17சங் 94:8தானி 7:20-21

துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.

உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; 2 நாளாக 30:8அப் 7:51ஏசா 48:4உபா 31:27யாத் 32:9எசேக் 2:4

உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.

கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. சங் 3:3

தேவனே நியாயாதிபதி; லூக் 1:52தானி 2:21-22சங் 113:7-8சங் 147:62 சாமு 6:21சங் 50:61 சாமு 2:7-8எரே 27:4-8

ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, யோபு 21:20எரே 25:15சங் 11:6வெளி 16:19வெளி 14:9-10எரே 25:17ஏசா 5:22சங் 60:3

அதிலிருந்து ஊற்றுகிறார்;

பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, சங் 104:33சங் 145:1-2சங் 40:10சங் 9:14

யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.

துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; சங் 89:17சங் 92:10எரே 48:25சங் 101:8சங் 148:14சகரி 1:20-211 சாமு 2:1லூக் 1:69

நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.