சங்கீதங்கள் 77

Psalms 77
சங்கீதம் 77

எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.

நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், சங் 3:4சங் 142:1-3சங் 50:1சங் 39:1சங் 62:1சங் 34:61 நாளாக 25:31 நாளாக 25:6

என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன்,

அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; ஏசா 26:9சங் 50:15ஆதி 37:35ஏசா 26:16எபி 5:7எஸ்த 4:1-4யோனா 2:1-2ஓசி 5:13

இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது;

என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.

நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; சங் 142:2-3சங் 61:2யோபு 31:23யோபு 7:11எரே 17:17யோபு 23:15-16யோபு 6:4புலம் 3:39

நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)

நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; யோபு 7:13-15சங் 6:6யோபு 2:13எஸ்த 6:1யோபு 6:3

நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.

ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன். உபா 32:7ஏசா 51:9சங் 143:5சங் 44:1ஏசா 63:9-15மீகா 7:14-15சங் 74:12-18

இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, சங் 42:8சங் 4:4சங் 139:23-24புலம் 3:40அப் 16:25பிரச 1:16யோபு 10:2யோபு 35:10

என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்;

என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? சங் 85:1புலம் 3:31-32சங் 89:46ரோம 11:1-2சங் 85:5சங் 13:1-2சங் 37:24சங் 89:38

இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?

அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? எண் 23:192 பேது 3:9ரோம 9:6எரே 15:18லூக் 16:25-26எண் 14:34ஏசா 27:11

வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?

தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? ஏசா 49:14-15சங் 40:111 யோவா 3:17ஏசா 40:27ஏசா 63:15லூக் 13:25-28சங் 25:6சங் 51:1

கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)

அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; யோபு 42:3யாத் 15:6மாற் 9:24சங் 31:22ஆப 3:2-13சங் 77:5உபா 4:34புலம் 3:18-23

ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.

யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், சங் 143:51 நாளாக 16:12சங் 105:5ஏசா 5:12சங் 28:5சங் 78:11சங் 111:4சங் 77:10

உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;

உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, சங் 71:24சங் 145:11உபா 6:7சங் 105:2லூக் 24:14-32சங் 104:34சங் 143:5சங் 145:4

உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; யாத் 15:11சங் 73:17ஏசா 40:25உபா 32:31ஏசா 40:18சங் 89:6-8ஏசா 46:5சங் 27:4

நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?

அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; தானி 6:27சங் 136:4யாத் 15:11யாத் 13:14ஏசா 51:9சங் 72:18யோசு 9:9-10வெளி 15:3

மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.

யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, உபா 9:29யாத் 6:6ஏசா 63:9உபா 9:26சங் 74:2ஆதி 48:3-20சங் 136:11-12

உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)

தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, யாத் 14:21ஆப 3:15யோசு 3:15-16சங் 114:3-6ஆப 3:8-10

தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது;

ஆழங்களும் கலங்கினது.

மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; சங் 18:142 சாமு 22:15நியாயாதி 5:4சங் 144:6சங் 68:33சங் 68:8-9ஆப 3:11

ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது;

உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.

உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; சங் 97:4வெளி 11:192 சாமு 22:14யாத் 19:16ஆப 3:4நியாயாதி 5:4மத் 27:51மத் 28:2

மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; யாத் 14:28ஆப 3:15நெகே 9:11சங் 29:10நாகூ 1:3-4சங் 97:2ரோம 11:33

உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.

மோசே ஆரோன் என்பவர்களின் கையால், யாத் 13:21சங் 78:52யாத் 14:19ஏசா 63:11-12சங் 80:1ஓசி 12:13அப் 7:35-36

உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.