தாவீதின் பாடல்.
யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், சங் 71:2சங் 31:1சங் 140:6தானி 9:161 யோவா 1:9சங் 89:1-22 சாமு 7:25
என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்;
உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.
உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, பிரச 7:20யோபு 25:4ரோம 3:20சங் 130:31 யோவா 1:10கலா 2:16யோபு 15:14யோபு 14:3
அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.
எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, புலம் 3:6சங் 7:1-2சங் 7:52 சாமு 2:22சங் 142:6சங் 17:9-13சங் 88:4-62 சாமு 18:11
என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி,
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.
என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; சங் 142:3சங் 77:3லூக் 22:44சங் 102:3-4சங் 55:5யோபு 6:27சங் 102:1சங் 119:81-83
என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; சங் 77:10-12சங் 77:5-61 சாமு 17:45-50மீகா 6:5சங் 111:41 சாமு 17:34-37ஏசா 63:7-14உபா 8:2-3
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; யோபு 11:13சங் 63:1சங் 84:2சங் 88:9சங் 42:1-2சங் 44:20ஏசா 26:8-9ஏசா 35:7
வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)
யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், சங் 69:17சங் 28:1சங் 27:9சங் 71:12ஏசா 38:18சங் 102:2சங் 69:3சங் 70:5
என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது;
நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு,
உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், சங் 25:4-5நீதி 3:5-6சங் 32:8ஏசா 48:17ஏசா 30:21சங் 46:5சங் 143:10சங் 27:11
உம்மை நம்பியிருக்கிறேன்,
நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;
உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; நீதி 18:10சங் 61:3-4சங் 142:5சங் 59:1சங் 31:15சங் 34:2-4சங் 56:9எபி 6:18
உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், சங் 25:4-5யோவா 14:26எபி 13:21சங் 23:3சங் 119:12நெகே 9:202 தீமோ 1:7யோவா 16:13-15
நீரே என் தேவன்;
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.
யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; சங் 31:1எபே 2:4-5சங் 119:25சங் 71:2சங் 138:7சங் 25:11சங் 34:19வெளி 7:14-17
உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை
பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.
உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, சங் 54:5சங் 116:16சங் 119:941 சாமு 24:12-151 சாமு 25:291 சாமு 26:10சங் 136:15-20சங் 52:5
என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்;
நான் உமது அடியேன்.