தாவீதின் ஜெபம்.
யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, சங் 31:2தானி 9:18சங் 40:17மத் 5:3சங் 34:6யாக் 1:9-10யாக் 2:5லூக் 4:18
என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்;
நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், சங் 25:2சங் 4:3ஏசா 26:3-4யோவா 17:11சங் 119:94சங் 13:5சங் 18:19சங் 31:1
நான் பக்தியுள்ளவன்;
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். சங் 57:1சங் 88:9எபே 6:18சங் 25:5லூக் 2:37சங் 4:1சங் 55:17சங் 56:1
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; சங் 143:8சங் 25:1ஏசா 66:13-14சங் 51:12ஏசா 61:3சங் 62:8ஏசா 65:18
ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், சங் 145:8-9யோவே 2:13யாத் 34:6சங் 103:8நெகே 9:17அப் 2:211 யோவா 4:8-9எசேக் 36:37
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.
யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, சங் 5:1-2சங் 17:1சங் 130:2சங் 55:1
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; யோனா 2:2சங் 34:4-6சங் 17:6சங் 50:15எபி 5:7ஏசா 26:16புலம் 3:55-57சங் 142:1
நீர் என்னைக் கேட்டருளுவீர்.
ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; யாத் 15:11உபா 3:24சங் 89:6தானி 3:29ஏசா 40:25சங் 89:8எரே 10:16உபா 4:34
உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை.
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, வெளி 15:4ஏசா 66:23சங் 66:4ஏசா 2:2-4சங் 102:15வெளி 11:15ரோம 15:9ஏசா 11:9
உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.
தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; ஏசா 37:16மாற் 12:29சங் 72:181 கொரி 8:4உபா 32:39யாத் 15:11ஏசா 37:20ஏசா 44:6-8
நீர் ஒருவரே தேவன்.
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், எரே 32:38-39சங் 25:4-5சங் 5:8சங் 119:33சங் 143:8-10யோபு 34:32சங் 25:12சங் 26:3
நான் உமது சத்தியத்திலே நடப்பேன்;
நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
என் தேவனாகிய ஆண்டவரே; உபா 6:5சங் 146:1-2வெளி 19:5-6ரோம 15:61 கொரி 10:31ஏசா 12:11 கொரி 6:20நீதி 3:5-6
உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து,
உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; சங் 103:8-12சங் 116:8சங் 57:101 தெச 1:10லூக் 1:58சங் 56:13யோபு 33:28சங் 30:3
என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், சங் 54:3மத் 27:1-2மத் 26:3-4சங் 14:4சங் 36:12 சாமு 15:1-122 சாமு 16:202 சாமு 17:14
கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்,
உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், எபே 2:4-7சங் 103:8சங் 130:7எபே 1:7சங் 145:8சங் 86:5யோவே 2:13நெகே 9:17
இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும்,
சத்தியமுமுள்ள தேவன்.
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; எபே 6:10பிலி 4:13ஏசா 40:29-31சங் 116:16சங் 25:16கொலோ 1:11எபே 3:16சங் 138:3
உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி,
உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து சங் 41:10-11நியாயாதி 6:17சங் 71:20-21சங் 71:9-13மீகா 7:8-10சங் 40:11 கொரி 5:5சங் 109:29
என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு,
எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.