சங்கீதங்கள் 62

Psalms 62
சங்கீதம் 62

எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; புலம் 3:25சங் 62:2ஏசா 40:31சங் 33:20சங் 37:7ஏசா 12:2யாக் 5:7சங் 40:1

அவரால் என் இரட்சிப்பு வரும்.

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், சங் 18:22 கொரி 4:8-9சங் 62:6ஏசா 26:4ஏசா 32:2சங் 73:25-26சங் 89:26சங் 27:1

என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.

நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், எரே 4:14சங் 140:2சங் 82:2யாத் 16:28ஏசா 30:13-14நீதி 1:22சங் 21:11சங் 38:12

நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள்,

சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.

அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே சங் 55:21சங் 28:3சங் 5:9ரோம 7:22ரோம 1:32வெளி 22:15அப் 4:16-17அப் 4:25-28

அவர்கள் ஆலோசனைசெய்து,

பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து,

தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள்.

(சேலா)

என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; மீகா 7:7சங் 27:13-14புலம் 3:24-26சங் 42:11சங் 71:5சங் 103:1-2சங் 104:1சங் 104:35

நான் நம்புகிறது அவராலே வரும்.

அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், சங் 112:6சங் 62:2சங் 16:8நீதி 10:30ஏசா 45:17சங் 18:31-32ஓசி 1:7நீதி 12:7

என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அசைக்கப்படுவதில்லை.

என்னுடைய இரட்சிப்பும், சங் 3:3ஏசா 26:4சங் 94:22சங் 18:2எரே 3:23சங் 95:1எரே 9:23-24சங் 46:1

என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது;

பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; பிலி 4:6ஏசா 26:4புலம் 2:19சங் 142:21 சாமு 1:15சங் 18:2சங் 42:4சங் 22:4-5

அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;

தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)

கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; சங் 39:5ஏசா 40:15ஏசா 40:17சங் 118:9சங் 39:111 சாமு 18:21-261 சாமு 18:51 சாமு 23:12

தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும்

மாயையிலும் லேசானவர்கள்.

கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; 1 தீமோ 6:17சங் 52:7எரே 17:111 தீமோ 6:10உபா 6:10-12ஏசா 61:8யோபு 31:24-25உபா 8:12-14

செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.

தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; வெளி 19:1யோபு 33:14ஏசா 26:4யோபு 40:5சங் 68:34-35யோவா 19:11மத் 28:18மத் 6:13

வல்லமை தேவனுடையது என்பதே.

கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! மத் 16:27யோபு 34:112 கொரி 5:10சங் 103:8ரோம 2:6யாத் 34:6-7நீதி 24:12சங் 86:15

தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.