சங்கீதங்கள் 147

Psalms 147
சங்கீதம் 147

யெகோவாவை துதியுங்கள்; சங் 135:3சங் 33:1சங் 42:4சங் 92:1சங் 63:3-5வெளி 5:9-14சங் 122:1-4வெளி 19:1-6

நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,

துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.

யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; உபா 30:3ஏசா 56:8சங் 51:18ஏசா 62:7சங் 102:20-22எபே 2:12-19எசேக் 38:8எசேக் 39:27-28

துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், சங் 34:18யோபு 5:18எரே 33:6ஏசா 61:1லூக் 4:18ஓசி 6:1-2ஏசா 57:15சங் 51:17

அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, ஏசா 40:26சங் 148:3சங் 8:3ஆதி 15:5

அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.

நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; ஏசா 40:28சங் 139:17-18சங் 96:4ரோம 11:33நாகூ 1:3சங் 40:5சங் 48:1எரே 10:6

அவருடைய அறிவு அளவில்லாதது.

யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; சங் 25:91 பேது 5:6சங் 146:8-9யாக் 4:10செப்ப 2:3சங் 145:14சங் 149:41 சாமு 2:8

துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.

யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; சங் 95:1-2சங் 47:6-7சங் 68:32சங் 107:21-22சங் 92:1-3வெளி 5:8-10யாத் 15:20-21

நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.

அவர் வானத்தை மேகங்களால் மூடி, யோபு 5:10சங் 65:9-13அப் 14:17ஆதி 9:14யோபு 26:8-9மத் 5:451 இராஜா 18:44-45ஆமோ 5:7-8

பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,

மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.

அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். சங் 104:27-28யோபு 38:41மத் 6:26சங் 136:25லூக் 12:24சங் 145:15-16

அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; 1 சாமு 16:7ஏசா 31:1நீதி 21:31சங் 20:7சங் 33:16-18பிரச 9:11ஓசி 1:7யோபு 39:19-25

வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் சங் 33:18மல்கி 3:16-17செப்ப 3:17சங் 149:4ஏசா 62:4சங் 35:27சங் 33:22நீதி 11:20

யெகோவா பிரியமாக இருக்கிறார்.

எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; ஏசா 12:6யோவே 2:23ஏசா 52:7சங் 135:19-21சங் 146:10சங் 149:2

சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.

அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, சங் 128:3-6ஏசா 44:3-5சங் 115:14-15எரே 30:19-20சங் 144:12சங் 125:2புலம் 2:8-9நெகே 12:30

உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, சங் 29:11ஏசா 60:17-18சங் 81:16சங் 132:15உபா 32:141 நாளாக 22:9உபா 8:7-8ஏசா 66:12

செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; யோபு 37:12சங் 107:202 தெச 3:1யோபு 34:29மத் 8:13மத் 8:8-9சங் 33:9யோனா 1:4

அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.

பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; யோபு 37:6யோபு 38:29சங் 148:8ஏசா 55:10யோபு 37:9-10

சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.

அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; யோபு 38:29-30யோபு 38:22-23யோபு 37:9-10சங் 78:47-48யாத் 9:23-25யோசு 10:11

அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; சங் 147:15சங் 33:9யோபு 37:10யோபு 6:16-17சங் 107:20யோபு 37:17

தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.

யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், மல்கி 4:4சங் 78:5உபா 33:2-4உபா 4:45உபா 5:22உபா 5:31ரோம 3:2ரோம 9:4

இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; உபா 4:32-34உபா 4:7-81 பேது 2:9-10எபே 2:12ரோம 3:1-2எபே 5:8அப் 14:16அப் 26:27

அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள்.

அல்லேலூயா.