எகிப்தை நம்புகிறவர்களுக்கு ஐயோ
உதவி பெறுவதற்காக இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவை தேடாமலும், எகிப்திற்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர்கள் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ, சங் 20:7எரே 17:5உபா 17:16எரே 2:13ஏசா 36:9தானி 9:13ஏசா 30:16சங் 33:16-17 அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரச்செய்து, தீமை செய்கிறவர்களின் வீட்டிற்கும், அக்கிரமக்காரருக்கு உதவி செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். எண் 23:19ஏசா 45:71 கொரி 1:21-29ஆமோ 3:6எரே 10:12யூதா 1:25மத் 24:35ரோம 16:27 எகிப்தியர்கள் தெய்வம் அல்ல, மனிதர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; யெகோவா தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது உதவி செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாக அழிந்துபோவார்கள். எசேக் 20:33-34ஏசா 9:17எசேக் 28:9ஏசா 30:7எரே 15:6சங் 33:17சங் 9:20உபா 32:30-31 யெகோவா என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் யெகோவா சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார். ஆமோ 3:8ஓசி 11:10ஏசா 42:13சகரி 2:5சகரி 12:8வெளி 5:5சகரி 14:32 நாளாக 20:15 பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் யெகோவா எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். சங் 91:4சங் 37:40உபா 32:11ஏசா 37:35ஏசா 38:6யாத் 19:4ஏசா 10:14சங் 46:5 இஸ்ரவேல் மக்களே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள். எரே 3:22எரே 3:14ஏசா 55:7எரே 3:102 நாளாக 33:9-16அப் 26:20அப் 3:19ஓசி 9:9 உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி சிலைகளையும், பொன் சிலைகளையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள். ஏசா 30:22ஏசா 2:20எசேக் 36:25உபா 7:25ஓசி 14:81 இராஜா 12:28-30ஓசி 8:11 அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; மனிதனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்திற்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள். ஏசா 14:25ஆதி 49:152இராஜா 19:34-37ஓசி 1:7ஏசா 10:12ஏசா 10:16-19ஏசா 10:33-34ஏசா 29:5 அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய யெகோவா சொல்கிறார். ஏசா 29:6மல்கி 4:1உபா 32:37ஏசா 10:17ஏசா 18:3ஏசா 4:4லேவி 6:13சகரி 2:5