ஓசியா 11

Hosea 11
அத்தியாயம் 11

இஸ்ரவேலின்மேல் தேவனுடைய அன்பு

இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய மகனை வரவழைத்தேன். மத் 2:15யாத் 4:22ஓசி 13:4ஓசி 2:15எரே 2:2உபா 7:7எசேக் 16:6ஓசி 12:13 அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்திற்கு விலகிப்போய்விட்டார்கள்; 1 பாகால்களுக்குப் பலியிட்டு, சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். ஓசி 2:13எரே 18:15ஏசா 65:72இராஜா 17:13-16அப் 7:51ஓசி 11:7ஓசி 13:1-2யோவா 3:19 நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். உபா 1:31யாத் 15:26எரே 30:17ஓசி 7:15அப் 13:18உபா 32:10-12உபா 8:2யாத் 23:25 மனிதரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த பாரத்தை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பக்கமாக சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன். யோவா 12:32லேவி 26:132 கொரி 5:14ஏசா 63:9எரே 31:2-32 சாமு 7:14ஓசி 2:8சங் 78:23-25 மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்து தேசத்திற்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா. ஓசி 7:16ஓசி 8:132இராஜா 17:13-14ஓசி 10:6ஓசி 9:32இராஜா 15:192இராஜா 15:292இராஜா 17:3-6 ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினால் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை அழியச்செய்து, அவர்களை எரித்துப்போடும். ஓசி 13:16ஓசி 10:14ஓசி 10:6உபா 28:52உபா 32:25எசேக் 15:2-7எசேக் 20:47ஏசா 18:5 என் மக்கள் என்னைவிட்டு விலகுகிற வேறுபாட்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. எரே 8:5ஆமோ 5:14-15ஆமோ 5:4-6ஓசி 11:2ஓசி 14:4ஓசி 7:16எரே 3:11எரே 3:6-8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போல் ஆக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாகப் பொங்குகிறது. எரே 31:20ஓசி 6:4மத் 23:37உபா 32:36உபா 29:23யூதா 1:72 சாமு 24:16ஆமோ 4:11 என் கடுங்கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனிதனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் கடுங்கோபத்தோடு உன்னிடத்தில் நான் வரமாட்டேன். 2 எண் 23:19ஏசா 55:8-9மீகா 7:18-20ஏசா 12:6எரே 30:11எசேக் 37:27-28மல்கி 3:6ஓசி 14:4 அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள். யோவே 3:16ஆமோ 1:2ஏசா 31:4எரே 25:30ஏசா 64:2எரே 31:92 பேது 2:10அப் 24:25 எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 11:11ஏசா 60:8சகரி 10:10ஆமோ 9:14-15ஓசி 7:11எசேக் 28:25-26ஒபதி 1:17எசேக் 36:33-34 எப்பிராயீமர்கள் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; யூதாவோவென்றால் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான். 1 கொரி 6:22 நாளாக 29:1-32ஓசி 12:7ஏசா 29:13ஏசா 44:20வெளி 1:6வெளி 3:212இராஜா 18:4-7