ஓசியா 13

Hosea 13
அத்தியாயம் 13

இஸ்ரவேலுக்கு விரோதமான யெகோவாவுடைய கோபம்

எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான். ஓசி 11:2ஆதி 2:17யோசு 3:7லூக் 14:11எண் 27:16-231 இராஜா 12:251 இராஜா 16:29-331 இராஜா 18:18-19 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள். 1 இராஜா 19:18ஏசா 44:17-20ஏசா 46:6ஓசி 2:8எரே 10:4ஆப 2:18-192 தீமோ 3:13ரோம 1:22-25 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள். ஓசி 6:4சங் 1:4சங் 68:2தானி 2:35ஏசா 17:13ஏசா 41:15-16சங் 83:12-17 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை. ஏசா 45:21-22யாத் 20:2-3ஓசி 12:9ஏசா 43:10-13ஏசா 43:3அப் 4:12ஏசா 44:6-8சங் 81:9-10 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்திரத்திலே அறிந்துகொண்டேன். உபா 32:10உபா 2:7உபா 8:15கலா 4:9சங் 142:3யாத் 2:25எரே 2:2நாகூ 1:7 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள் 1; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள். உபா 32:13-15உபா 8:12-14உபா 32:18உபா 6:10-12நெகே 9:35சங் 10:4ஓசி 10:1ஓசி 2:13 ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன். ஓசி 5:14எரே 5:6புலம் 3:10ஆமோ 1:2ஆமோ 3:4ஆமோ 3:8ஏசா 42:13 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும். 2 சாமு 17:8ஏசா 5:29ஆமோ 9:1-3ஏசா 56:9எரே 12:9நீதி 17:12சங் 50:22சங் 80:13 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்? 2. எரே 2:17எரே 2:19உபா 33:26உபா 33:29ஓசி 14:1ஏசா 3:11எரே 5:25நீதி 6:32 எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே? ஓசி 8:41 சாமு 8:5-6ஓசி 10:3சகரி 14:91 இராஜா 12:201 சாமு 12:11-121 சாமு 8:19-202இராஜா 17:4 நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன். 1 சாமு 10:191 சாமு 16:1நீதி 28:21 இராஜா 12:15-161 இராஜா 12:26-321 இராஜா 14:7-161 சாமு 12:131 சாமு 15:22-23 எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. உபா 32:34-35யோபு 14:17ரோம 2:5யோபு 21:19 பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை. ஏசா 37:3ஏசா 13:8ஏசா 26:172இராஜா 19:3மீகா 4:9-10சங் 48:61 தெச 5:3ஏசா 66:9 அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். ஏசா 25:81 கொரி 15:52-57வெளி 21:4ஏசா 26:19யாக் 1:17சங் 49:151 கொரி 15:21-22சங் 30:3 இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும். எசேக் 19:12எசேக் 17:10ஆதி 41:52ஆதி 48:19ஆதி 49:22எரே 4:11தானி 11:8உபா 33:17 சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும். 2இராஜா 15:162இராஜா 8:12ஏசா 13:16சங் 137:8-9ஆமோ 1:13நாகூ 3:102இராஜா 17:182இராஜா 17:6