யாத்திராகமம் 20

Exodus 20
அத்தியாயம் 20

பத்துக் கட்டளைகள்

உபா 5:1-21

தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன. உபா 5:22உபா 5:4உபா 4:36அப் 7:38உபா 4:33அப் 7:53

“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே. உபா 5:6ஓசி 13:4லேவி 26:13சங் 81:10யாத் 13:3லேவி 19:36உபா 26:6-8ஆதி 17:7-8

என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். உபா 5:7மத் 4:10சங் 81:9ஏசா 46:9உபா 6:14உபா 6:5எரே 25:6யோசு 24:18-24

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; உபா 5:8லேவி 26:1உபா 4:15-19சங் 97:7லேவி 19:4உபா 27:15அப் 17:29வெளி 16:2 நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன். உபா 5:9எண் 14:18உபா 4:24யாத் 34:14யோசு 24:19உபா 6:15யாத் 34:6-7ஏசா 65:6-7 என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன். உபா 7:91 யோவா 5:3யோவா 14:21எரே 32:39-40உபா 5:29அப் 2:39யோவா 14:15ரோம 11:28-29

உன்னுடைய தேவனாகிய யெகோவாடைய நாமத்தை வீணிலே வழங்காமல் இருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார். உபா 5:11லேவி 19:12யாக் 5:12மத் 5:33-37சங் 50:14-16எரே 4:2யோசு 9:20மத் 26:63-64

ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை; லேவி 26:2லேவி 19:3யாத் 31:13-16ஆதி 2:3லேவி 23:3லேவி 19:30யாத் 16:23-30யாத் 23:12 ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து; லூக் 13:14யாத் 23:12யாத் 34:21லேவி 23:3யாத் 35:2 ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம். உபா 5:14-15யாத் 34:21யாத் 16:27-28எண் 15:32-36உபா 24:14-22யாத் 23:9-12யாத் 31:13ஆதி 2:2-3 யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ஆதி 1:1-2ஆதி 2:2-3யாத் 31:17மாற் 2:27-28சங் 95:4-7ஆதி 1:28அப் 20:7

உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக. எபே 6:1-3கொலோ 3:20உபா 5:16மாற் 7:10நீதி 23:22-25லேவி 19:3நீதி 30:17நீதி 1:8-9

கொலை செய்யாதே. ரோம 13:9உபா 5:17ஆதி 9:5-6யாத் 21:14மத் 5:21-221 யோவா 3:12-15உபா 19:11-13யாக் 2:11

விபசாரம் செய்யாதே. எபி 13:4உபா 5:18ரோம 7:2-3ரோம 13:9லேவி 20:10மத் 5:27-28வெளி 21:8லேவி 18:20

களவு செய்யாதே. ரோம 13:9எபே 4:28லேவி 19:11லேவி 19:13மத் 19:181 கொரி 6:10லேவி 6:1-7நீதி 1:13-15

பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே. நீதி 19:5மத் 19:18சங் 15:3யாத் 23:1உபா 19:15-21மத் 26:59-60நீதி 10:18அப் 6:13

பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார். ரோம 13:9லூக் 12:15எபி 13:5எபே 5:5கொலோ 3:5எபே 5:3ரோம 7:71 கொரி 6:10

மக்கள் எல்லோரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, மக்கள் எல்லோரும் நடு நடுங்கி, தூரத்திலே நின்று, யாத் 19:16-18எபி 12:18-19எரே 23:23சங் 139:7-8 மோசேயை நோக்கி: “நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாமல் இருக்கட்டும், பேசினால் நாங்கள் செத்துப்போவோம்” என்றார்கள். உபா 18:16அப் 7:38உபா 5:23-27யாத் 33:20உபா 5:5கலா 3:19ஆதி 32:30எபி 12:19 மோசே மக்களை நோக்கி; “பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” என்றான். உபா 13:3நீதி 3:71 சாமு 12:20ஏசா 8:13உபா 8:2ஆதி 22:1யோபு 28:28நீதி 16:6 மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான். 1 இராஜா 8:12சங் 97:2சங் 18:91 தீமோ 6:162 நாளாக 6:1உபா 5:5யாத் 19:16-17சங் 104:2

பலிபீடத்தின் பிரமாணம்

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேலர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்று கண்டீர்கள். நெகே 9:13உபா 4:36எபி 12:25-26 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம். எசேக் 20:392இராஜா 17:33செப்ப 1:51 கொரி 10:21-221 யோவா 5:20-21யாத் 20:3-5யாத் 32:31வெளி 22:15 மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன்னுடைய ஆடுகளையும் உன்னுடைய மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்து; நான் என்னுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் எந்த இடத்திலும் உன்னிடம் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். உபா 12:5சங் 132:13-142 நாளாக 6:61 இராஜா 9:32 நாளாக 7:16உபா 12:11உபா 16:11உபா 26:2 எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமானால், அதை வெட்டின கற்களால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளி பதித்தவுடன், அதை அசுத்தப்படுத்துவாய். உபா 27:5-6யோசு 8:31 என்னுடைய பலிபீடத்தின்மேல் உன்னுடைய நிர்வாணம் காணப்படாதபடி, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்”. 1 பேது 1:16பிரச 5:1எபி 12:28-29லேவி 10:3சங் 89:7