கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.
நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, எரே 31:7சங் 66:1சங் 100:1-2பிலி 4:13சங் 46:11சங் 8:1சங் 28:7ஆதி 50:17
யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங் 149:1-3கொலோ 3:16சங் 92:3எபே 5:19யாத் 15:20மாற் 14:26யாக் 5:13சங் 95:1-2
பாட்டு பாடுங்கள்.
மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், லேவி 23:24-25எண் 15:32 நாளாக 2:42 நாளாக 13:14உபா 16:15எண் 10:1-101 நாளாக 15:241 நாளாக 16:42
நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,
யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, உபா 28:49எரே 5:15சங் 114:11 கொரி 14:21-22யாத் 11:4யாத் 13:8-9ஏசா 28:11சங் 77:15
இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; ஏசா 9:4ஏசா 10:27யாத் 6:6மத் 11:29யாத் 1:14சங் 68:13
அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது.
நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; யாத் 19:19எண் 20:13யாத் 2:23சங் 50:15யாத் 14:10யாத் 14:30-31சங் 91:14-15யாத் 14:24
இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்;
மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)
என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; சங் 50:7யாத் 15:26யோவா 3:111 யோவா 5:9ஏசா 1:19ஏசா 55:3-4யோவா 3:32-33சங் 81:13
இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.
உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; ஏசா 43:12உபா 32:121 கொரி 8:5-6உபா 6:14யாத் 20:3-5மல்கி 2:11சங் 44:20
அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.
உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; யோவா 15:7யாத் 20:2சங் 107:9யோவா 7:37வெளி 21:6எபே 3:19-20சங் 37:3-4வெளி 22:17
உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.
என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; எரே 7:23-24உபா 32:18யாத் 32:1எரே 2:11-13உபா 32:15எபி 10:29நீதி 1:30சகரி 7:11
இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; எரே 7:24ரோம 1:24ஏசா 30:1அப் 7:422 தெச 2:9-11அப் 14:16ரோம 1:26-27எரே 44:16-17
தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.
ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, உபா 5:29ஏசா 48:18உபா 10:12-13லூக் 19:41-42மத் 23:37உபா 32:29
இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, ஆமோ 1:8நியாயாதி 2:20-23யோசு 23:13எண் 14:9எண் 14:45சங் 47:3சகரி 13:7
என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; உபா 7:10சங் 63:3ரோம 1:30ரோம 8:7யாத் 20:5யோவே 3:20யோவா 15:22-23சங் 102:28
அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; உபா 32:13-14சங் 147:141 சாமு 14:25-26யோவே 2:24நியாயாதி 14:18நியாயாதி 14:8-9யோபு 29:6
கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.