ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் ஆட்சியின் காலங்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி. 2 நாளாக 26:12இராஜா 18:1சங் 89:192இராஜா 15:12இராஜா 15:322இராஜா 15:7அப் 10:17ஆமோ 1:1
கலகக்கார தேசம்
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள். உபா 32:1உபா 30:19மீகா 1:2உபா 4:26சங் 50:4மல்கி 1:6மீகா 6:1-2ஆமோ 3:1 மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார். எரே 8:7எரே 4:22ஏசா 44:18ஏசா 5:12மத் 13:13-15சங் 94:8ரோம 1:28ஏசா 27:11 ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். ஏசா 5:24எரே 2:17எரே 2:13ரோம 8:7அப் 7:51-52ஏசா 5:19எரே 2:19எரே 7:19 இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது. தானி 9:8-11எசேக் 24:13எரே 5:3வெளி 16:8-11ஏசா 31:6எரே 5:31செப்ப 3:1-4எபி 12:5-8 உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. எரே 6:14எரே 33:6மத் 9:12யோபு 5:18லூக் 10:34மல்கி 4:2சங் 38:3-5சங் 77:2 உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது. உபா 28:33உபா 28:43புலம் 5:2எசேக் 30:12ஓசி 7:92 நாளாக 28:16-212 நாளாக 28:5உபா 28:48-52 மகளாகிய சீயோன், திராட்சைத்தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு நகரத்தைப்போலவும் மீந்திருக்கிறாள். சகரி 9:9யோவா 12:15சகரி 2:10ஏசா 62:11ஏசா 10:32புலம் 2:6ஏசா 37:22ஏசா 4:4 சேனைகளின் யெகோவா நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். ரோம 9:29ஏசா 37:31-32ஆதி 19:24புலம் 3:22ஆமோ 4:11ரோம 11:4-6ஆதி 18:32ஏசா 10:20-22 சோதோமின் அதிபதிகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள். உபா 32:32எசேக் 16:49ஏசா 3:9வெளி 11:81 இராஜா 22:19-23எசேக் 16:46ஆதி 13:13ஏசா 28:14 உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. 1 சாமு 15:22ஆமோ 5:21எரே 6:20ஏசா 66:3மீகா 6:7மல்கி 1:10மத் 9:13நீதி 15:8 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? யாத் 34:23பிரச 5:1யாத் 23:17ஏசா 58:1-2மீகா 6:8சங் 40:6மத் 23:5உபா 16:16 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன். ஏசா 66:3மல்கி 1:10மத் 15:9எசேக் 20:39புலம் 2:61 நாளாக 23:311 கொரி 11:17உபா 16:1-22 உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன். ஆமோ 5:21ஏசா 43:24ஏசா 61:8ஏசா 7:13ஆமோ 2:13ஏசா 29:1மல்கி 2:17சகரி 11:8 நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. மீகா 3:4ஏசா 59:2-3நீதி 1:28சகரி 7:13எரே 7:8-10சங் 66:18ஏசா 58:7எரே 14:12 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; 1 பேது 3:11ஏசா 55:6-71 பேது 2:12 கொரி 7:1யாக் 4:8எசேக் 18:30-31தீத் 2:11-14மத் 3:8 நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். மீகா 6:8எரே 22:3சங் 82:3-4நீதி 31:9ஏசா 1:23சகரி 7:9-10எரே 22:15-16தானி 4:27 வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ஏசா 44:22வெளி 7:14சங் 51:7மீகா 7:18-19ஏசா 43:24-26எபே 1:6-8ஏசா 41:21ஏசா 41:1 நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். உபா 30:15-16ஏசா 3:10யோவே 2:26எபி 5:9ஏசா 55:6-7ஏசா 55:1-3மத் 21:28-32எரே 31:18-20 மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசா 65:12ஏசா 58:14ஏசா 40:5எண் 23:19ஏசா 3:11ஏசா 3:251 சாமு 12:252 நாளாக 36:14-16 உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள். எசேக் 22:1-23சகரி 8:3செப்ப 3:1-32 நாளாக 19:92 சாமு 8:15அப் 7:52எசேக் 16:1-63எபி 12:22 உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது. எசேக் 22:18-22ஓசி 4:18எரே 6:28-30புலம் 4:1-22 கொரி 2:17ஓசி 6:4 உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. மீகா 7:3யாத் 23:8சகரி 7:10அப் 4:5-11லூக் 18:2-5ஏசா 10:1-2ஏசா 3:14எரே 5:28-29 ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன். ஏசா 60:16உபா 28:63ஏசா 49:26எசேக் 5:13ஏசா 35:4ஏசா 61:2சங் 132:2உபா 32:43 நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். மல்கி 3:3ஏசா 1:22ஏசா 4:4எரே 9:7எசேக் 20:38எசேக் 22:22ஏசா 6:11-13எரே 6:29 உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். எரே 33:7சகரி 8:3ஏசா 62:1-2எசேக் 34:23-24எசேக் 37:24-25எசேக் 45:8ஏசா 1:21ஏசா 32:1-2 சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். ஏசா 62:12ஏசா 45:21-25ஏசா 5:16ஏசா 63:41 கொரி 1:301 பேது 1:18-192 கொரி 5:21எபே 1:7-8 துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். 2 தெச 1:8-9சங் 1:6ஏசா 30:13யோபு 31:3வெளி 21:81 நாளாக 28:91 இராஜா 9:6-91 சாமு 12:25 நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்; 1 ஏசா 57:5ஏசா 65:3ஏசா 66:17எசேக் 16:63ஓசி 4:13எசேக் 36:31எசேக் 6:13ஓசி 14:3 இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். எரே 17:5-6எசேக் 17:24எசேக் 17:9-10எசேக் 31:4-18ஏசா 5:6ஏசா 58:11எரே 31:12மத் 21:19 பராக்கிரமசாலி சணல்குவியலும், அவன் செயல் அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அணைப்பாரில்லாமல் அனைத்தும் வெந்துபோகும் என்று சொல்கிறார். ஏசா 66:24எசேக் 32:21மல்கி 4:1எசேக் 20:47-48ஏசா 26:11ஏசா 27:4ஏசா 33:14ஏசா 34:9-10