தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 8

Song 8
அத்தியாயம் 8

ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், கலா 4:26சங் 45:10-11சகரி 9:9ஆகா 2:7ஏசா 60:14ஏசா 66:11-12ஏசா 7:14ஏசா 9:6

நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்;

என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.

நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, உன்னத 3:4உன்னத 4:10உன்னத 7:12கலா 4:261 பேது 1:10-122 தீமோ 3:15யோவா 5:39யோவா 5:46-47

என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்;

நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும்,

என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.

அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், உன்னத 2:62 கொரி 12:9உபா 33:27ஏசா 62:4-5

அவருடைய வலதுகை என்னை அணைக்கும்.

எருசலேமின் இளம்பெண்களே! உன்னத 2:7உன்னத 3:5

எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை

நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க

உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

அன்பு புதுப்பிக்கப்படுதல்

மணவாளியின் தோழிகள்

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு உன்னத 3:6ஏசா 40:3சங் 63:8உன்னத 2:3ஏசா 26:3-4மீகா 3:11உன்னத 3:4உன்னத 6:10

வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?

மணவாளி

கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்;

அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்;

அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.

நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், வெளி 12:11ஏசா 49:16பிலி 1:20-23ஆகா 2:23எரே 22:24யோவா 21:15-19எண் 5:14நீதி 6:34

உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்;

நேசம் மரணத்தைப்போல் வலிமையானது;

நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது;

அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.

திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது, நீதி 6:35ஏசா 43:2நீதி 6:31ரோம 13:8-10மத் 7:24-25ரோம 8:28-39

வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது;

ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும்,

அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும் 1.

மணவாளியின் சகோதரன்

நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு, 1 பேது 2:12அப் 22:21எசேக் 16:55-56சங் 2:8அப் 10:1அப் 15:14-17அப் 16:9அப் 26:17-18

அவளுக்கு மார்பகங்கள் இல்லை;

நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?

அவள் ஒரு மதிலானால், 1 கொரி 3:10-121 இராஜா 6:15அப் 14:27அப் 15:16எபே 2:20-22ஏசா 58:12ஏசா 60:17ஏசா 61:4

அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்;

அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.

மணவாளி

நான் மதில்தான், எசேக் 16:7ஏசா 60:10லூக் 1:301 தீமோ 1:16உபா 7:7-8எபே 1:6ஆதி 6:8நீதி 3:4

என் மார்பகங்கள் கோபுரங்கள்;

அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன்.

மணவாளன்

பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது, பிரச 2:4ஏசா 7:23ஆதி 20:16ஏசா 5:1-7லூக் 20:9-18மத் 21:33-43மாற் 12:1உன்னத 1:6

அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக,

ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் 2 கொண்டுவரும்படி விட்டார்.

என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; உன்னத 1:6அப் 20:281 கொரி 6:201 தெச 2:191 தீமோ 4:15-161 தீமோ 5:17-182 கொரி 5:15நீதி 4:23

சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும்,

அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.

தோட்டங்களில் குடியிருக்கிறவளே! உன்னத 4:16உன்னத 1:7நியாயாதி 11:38நியாயாதி 14:11யோவா 14:13-14யோவா 14:21-23மத் 18:20மத் 28:20

தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்;

நானும் அதைக் கேட்கட்டும்.

மணவாளி

என் நேசரே! விரைவாக வாரும், உன்னத 2:17வெளி 22:20வெளி 22:17உன்னத 2:9லூக் 19:12பிலி 1:23உன்னத 4:6

கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள

வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.