உன்னதப்பாட்டு 3

Song 3
அத்தியாயம் 3

துன்பம் நிறைந்த இரவு

இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; 1 பேது 1:8உன்னத 1:7உன்னத 5:6ஏசா 26:9ஏசா 55:6சங் 130:1-2சங் 22:2உன்னத 5:8

தேடியும் நான் அவரைக் காணவில்லை.

நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, எபே 5:14ரோம 13:111 கொரி 15:34ஏசா 64:7எரே 5:1யோவா 1:6லூக் 14:21-23மத் 26:40-41

என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்;

தேடியும் நான் அவரைக் காணவில்லை.

நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: உன்னத 5:7எசேக் 33:2-9ஏசா 21:11-12ஏசா 21:6-8யோவா 20:15எசேக் 3:17எபி 13:17ஏசா 56:10

என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.

நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, நீதி 8:17மத் 7:7நீதி 4:13உன்னத 6:12உன்னத 8:2ஏசா 45:19ஏசா 55:6-7எரே 29:13

என் ஆத்தும நேசரைக் கண்டேன்;

நான் அவரை என் தாயின் வீட்டிலும்,

என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்.

எருசலேமின் இளம்பெண்களே! உன்னத 2:7உன்னத 8:4மீகா 4:8

எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை

நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி,

வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும்

உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

சாலோமொனின் வருகை

மணவாளி

வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் உன்னத 8:5வெளி 12:14உன்னத 1:13உன்னத 4:6உபா 8:2ஏசா 43:19எரே 2:2எரே 31:2

வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி,

தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?

இதோ, சாலொமோனுடைய படுக்கை; 1 இராஜா 14:271 இராஜா 9:221 சாமு 14:521 சாமு 28:21 சாமு 8:162இராஜா 6:17எபி 1:14உன்னத 1:16

இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள்.

இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, சங் 45:31 தெச 5:6-8எபே 6:16-18ஏசா 27:3நெகே 4:21-22சங் 149:5-9சங் 91:5

போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்;

இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.

சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார். உன்னத 3:72 சாமு 23:5வெளி 14:6

அதின் தூண்களை வெள்ளியினாலும், 1 தீமோ 3:15-16எபே 3:18-19சங் 87:3வெளி 1:5வெளி 3:12ரோம 5:8உன்னத 1:5

அதின் தளத்தைப் பொன்னினாலும்,

அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்;

அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம்

நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது.

சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ஏசா 62:5ஓசி 2:19-20எரே 2:2எபி 13:13மத் 12:42சங் 9:14வெளி 1:7செப்ப 3:17

ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும்,

மனமகிழ்ச்சியின் நாளிலும்,

அவருடைய தாயார் அவருக்கு

அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.