நான் சாரோனின் 1 ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன். ஓசி 14:5ஏசா 57:15ஏசா 35:1-2உன்னத 5:13உன்னத 2:16உன்னத 6:3சங் 85:11
மணவாளன்
முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ, 1 பேது 2:12ஏசா 55:13மத் 10:16மத் 6:28-29பிலி 2:15-16
அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
மணவாளி
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, உன்னத 8:5எபி 1:1-6ஏசா 25:4ஏசா 32:2எபி 12:2யோவா 1:14-181 யோவா 1:3-4எசேக் 47:12
அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்;
அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன்,
அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது.
என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; யோவா 15:9-15ரோம 5:8-10ரோம 8:28-39உன்னத 1:4வெளி 3:20சங் 84:10ஏசா 11:10உன்னத 6:4
என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள், உன்னத 5:82 சாமு 6:19ஓசி 3:12 சாமு 13:1-2ஏசா 26:8-9லூக் 24:32பிலி 1:23சங் 119:130-131
கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்;
நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; ஏசா 54:5-10செப்ப 3:17எரே 32:41உன்னத 8:3-5எபே 5:25-29ஏசா 62:4-5யோவா 3:29நீதி 4:8
அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
மணவாளன்
எருசலேமின் இளம்பெண்களே! உன்னத 3:5உன்னத 8:4உன்னத 1:5நீதி 5:19உன்னத 5:8-9எபே 5:22-33உன்னத 2:9உன்னத 5:16
எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும்,
எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
நேசரின் வேண்டுகோள்
மணவாளி
இது என் நேசருடைய சத்தம்! யோவா 10:27ஏசா 52:7யோவா 3:29வெளி 3:20உன்னத 2:172 சாமு 6:16அப் 14:10அப் 3:8
இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.
என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; உன்னத 8:14உன்னத 2:171 கொரி 13:121 பேது 1:10-122 கொரி 3:13-182 சாமு 2:18கொலோ 2:17எபே 2:14-15
இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று
சன்னல் வழியாகப் பார்த்து,
தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
என் நேசர் என்னோடே பேசி: உன்னத 2:13உன்னத 4:7-8வெளி 22:172 கொரி 11:22 கொரி 6:17-18சங் 45:10-11வெளி 19:7-9உன்னத 2:8
மணவாளன்
என் பிரியமே!
என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா.
இதோ, மழைக்காலம் சென்றது, ஏசா 60:1-2பிரச 3:11எபே 5:8ஏசா 54:6-8பிரச 3:4ஏசா 40:2மத் 5:4வெளி 11:14-15
மழைபெய்து ஓய்ந்தது.
பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; ஏசா 55:12கொலோ 3:16எரே 8:7சங் 148:7-13சங் 89:15எபே 1:13-14எபே 5:18-20ஓசி 14:5-7
குருவிகள் பாடும் காலம் வந்தது,
காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.
அத்திமரம் காய்காய்த்தது; உன்னத 2:102 கொரி 6:1-2ஏசா 55:10-11ஏசா 61:11லூக் 13:6-7உன்னத 7:11-132 கொரி 5:20ஆகா 2:19
திராட்சைக்கொடிகள் பூப்பூத்து
வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது;
என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே!
நீ எழுந்து வா.
கன்மலையின் வெடிப்புகளிலும், எஸ்றா 9:5-6உன்னத 1:5உன்னத 5:2யாத் 3:6உன்னத 8:13யாத் 33:22-23யாத் 4:11-13எசேக் 7:16
மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!
உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு,
உன் சத்தத்தை நான் கேட்கட்டும்;
உன் சத்தம் இன்பமும்,
உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.
திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் லூக் 13:322 பேது 2:1-3உன்னத 7:12சங் 80:13எசேக் 13:4-16வெளி 2:2உன்னத 2:13
சிறுநரிகளையும் 2நமக்குப் பிடியுங்கள்;
நம்முடைய திராட்சைத்தோட்டங்கள்
பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே.
மணவாளி
என் நேசர் என்னுடையவர், உன்னத 6:3உன்னத 7:10எரே 31:33சங் 48:14சங் 63:11 கொரி 3:21-23கலா 2:20வெளி 21:2-3
நான் அவருடையவள்.
அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, உன்னத 4:62 பேது 1:19எபி 10:1எபி 8:5லூக் 1:78ரோம 13:12உன்னத 2:8-9உன்னத 8:14
நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,
நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில்
குதித்துவரும் கலைமானுக்கும்
மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.