1 கொரிந்தியர் 13

1 Corinthians 13
அத்தியாயம் 13

அன்பே பிரதானமானது

நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 1 பேது 4:81 தீமோ 1:5கலா 5:221 கொரி 13:8கலா 5:61 கொரி 13:2-31 கொரி 8:12 பேது 2:18 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை. 1 யோவா 4:81 கொரி 13:31 யோவா 4:20-21மத் 17:20மத் 21:211 கொரி 16:221 கொரி 12:8-101 கொரி 13:1 எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை. யாக் 2:14-17யோவா 15:13மத் 23:5மத் 6:1-4மத் 7:22-231 தீமோ 4:8கலா 5:26எபி 13:9 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, 1 பேது 4:8எபே 4:32கலா 5:21-22நீதி 10:12கொலோ 3:121 யோவா 4:11நீதி 17:9யாக் 3:14-17 அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, 1 கொரி 10:24பிலி 2:3-51 யோவா 3:16-17யாக் 1:19பிலி 2:21கலா 6:1-2பிலி 4:8ரோம 15:1-2 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். ரோம 12:93 யோவா 1:3-42 யோவா 1:4ரோம 1:322 தெச 2:12ஓசி 4:8நீதி 14:9லூக் 19:41-42 எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும். 1 பேது 4:81 கொரி 13:41 பேது 2:242 தீமோ 2:24நீதி 10:12கலா 6:21 கொரி 9:12உன்னத 8:6-7 அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும். 1 கொரி 13:131 கொரி 13:1-2கலா 5:61 கொரி 13:10அப் 2:4எபி 8:131 கொரி 12:101 கொரி 12:28-30 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது. கொலோ 2:2-3எபே 3:18-191 கொரி 2:9சங் 139:61 கொரி 13:121 கொரி 8:2யோபு 11:7-8மத் 11:27 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும். 1 கொரி 13:12ஏசா 60:19-202 கொரி 5:7-8ஏசா 24:23வெளி 22:4-5வெளி 21:22-23 நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன். 1 கொரி 14:201 கொரி 3:1-2கலா 4:1பிரச 11:10 இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். 1 யோவா 3:22 கொரி 3:181 கொரி 13:9-10பிலி 3:12வெளி 22:42 கொரி 5:7மத் 5:8யாக் 1:23 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரி 16:14கொலோ 3:141 யோவா 4:7-181 கொரி 13:1-8கலா 5:6மாற் 12:29-31பிலி 1:9புலம் 3:21-26