கலாத்தியர் 4

Galatians 4
அத்தியாயம் 4

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை. கலா 4:23கலா 4:29ஆதி 24:2-32இராஜா 11:122இராஜா 10:1-22இராஜா 12:2 தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காப்பாளருக்கும் வீட்டு விசாரணைக்காரர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் இந்த உலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்தோம். கொலோ 2:20கொலோ 2:8கலா 4:9கலா 2:4கலா 4:31அப் 15:10ரோம 8:15யோவா 8:31 நாம் புத்திரசுவிகாரத்தை அடைவதற்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, ஏசா 7:14மாற் 1:15யோவா 1:14ரோம 1:3எபே 1:101 யோவா 4:14யோவா 3:16மத் 1:23 காலம் நிறைவேறினபோது, பெண்ணிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். எபி 9:15எபே 1:51 பேது 1:18-20எபே 1:7கலா 3:13எபி 9:12வெளி 5:9கலா 3:26 மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார். ரோம 8:15-17ரோம 5:5ரோம 8:92 கொரி 3:17எபே 2:18பிலி 1:19எபே 4:30யூதா 1:20 ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய். கலா 3:29ரோம 8:16-17கலா 3:261 கொரி 3:21-23கலா 4:5-6கலா 4:312 கொரி 6:16-18சங் 73:26

கலாத்தியர்கள்மீதான பவுலின் கரிசனை

நீங்கள் தேவனை அறியாமல் இருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களாக இல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தீர்கள். 1 கொரி 8:41 தெச 1:91 தெச 4:5எபே 2:11-121 கொரி 1:211 கொரி 10:19-201 பேது 4:32 நாளாக 13:9 இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலன் இல்லாததும் வெறுமையானதுமான அந்த வழிபாடுகளுக்கு நீங்கள் மீண்டும் திரும்பி, மீண்டும் அவைகளுக்கு அடிமைகளாவதற்கு விரும்புகிறது ஏன்? 1 கொரி 8:3கலா 3:3ரோம 8:31 யோவா 5:201 நாளாக 28:92 பேது 2:201 கொரி 13:122 கொரி 4:6 நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருடங்களையும் கடைபிடித்து வருகிறீர்களே. கொலோ 2:16-17ரோம 14:5லேவி 23:1-44லேவி 25:13எண் 28:1-29லேவி 25:1 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாகப் போனதோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். 1 தெச 3:52 யோவா 1:8கலா 2:2பிலி 2:161 கொரி 15:582 கொரி 11:2-32 கொரி 12:20-21அப் 16:6 சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை. 2 கொரி 2:51 இராஜா 22:41 கொரி 9:20-23ஆதி 34:152 கொரி 6:13அப் 21:21கலா 2:14கலா 6:14 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன். 1 கொரி 2:32 கொரி 12:7-102 கொரி 10:102 கொரி 11:302 கொரி 11:62 கொரி 13:4கலா 1:6அப் 16:6 அப்படி இருந்தும், என் சரீரத்தில் இருக்கிற பெலவீனம் உங்களுக்கு சோதனையாக இருந்தாலும் நீங்கள் என்னை வெறுக்காமலும், தள்ளிவிடாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டீர்கள். மத் 10:401 தெச 2:13எபி 13:22 கொரி 5:202 சாமு 14:172 சாமு 19:27ஏசா 53:2-3லூக் 10:16 அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன். ரோம 5:21 யோவா 3:16-18கொலோ 4:131 தெச 2:81 தெச 5:132 கொரி 8:3கலா 3:14கலா 4:19 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ? ஆமோ 5:10நீதி 9:8யோவா 8:45கலா 5:7சங் 141:51 இராஜா 22:8கலா 2:5யோவா 7:7 அவர்கள் வைராக்கியத்தோடு உங்களைத் தேடுகிறார்கள்; ஆனாலும் நல்லமனதோடு அப்படிச் செய்யாமல், நீங்கள் என்னைவிட்டுவிட்டு, அவர்களை வைராக்கியத்தோடு பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறார்கள். 2 கொரி 11:13-15ரோம 16:182 பேது 2:31 கொரி 4:8மத் 23:151 கொரி 11:21 கொரி 4:182 கொரி 11:3 நல்லக் காரியத்திற்காக, நான் உங்களோடு இருக்கும்பொழுது மட்டுமில்லை, எப்பொழுதும் வைராக்கியம் கொள்வது நல்லதுதான். பிலி 2:12பிலி 1:27வெளி 3:191 கொரி 15:58கலா 4:13சங் 119:139தீத் 2:14ஏசா 59:17 என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரைக்கும் உங்களுக்காக மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்; எபே 4:13ரோம 13:14ரோம 8:29எபே 4:24கொலோ 4:12கொலோ 3:101 கொரி 4:14-15பிலி 2:5 உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுது உங்களிடம் வந்து, வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன். 1 தெச 2:17-181 கொரி 4:19-211 தெச 3:9

ஆகாரும் சாராளும்

நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள். கலா 3:10ரோம 3:19கலா 3:23-24கலா 4:9மத் 22:29-32யோவா 15:25யோவா 5:46-47ரோம 10:3-10 ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையான பெண்ணுக்கும் மற்றொருவன் சுதந்திரமான பெண்ணுக்கும் பிறந்தவன். ஆதி 16:15ஆதி 21:10ஆதி 16:2-4ஆதி 21:1-2 அடிமையானவளுக்குப் பிறந்தவன் சரீரத்தின்படி பிறந்தான், சுதந்திரமுள்ளவளுக்குப் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். எபி 11:11ஆதி 21:1-2ரோம 9:7-8கலா 4:28-29ஆதி 18:10-14ஆதி 17:15-19ரோம 4:18-21ரோம 10:8 இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே. ஆதி 21:9-131 கொரி 10:11ஆதி 16:15-16ஆதி 16:8ஆதி 25:12எபி 10:15-18எபி 12:24ஓசி 11:10 ஆகார் என்பது அரபிதேசத்தில் உள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு அடையாளம்; ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிறாளே. கலா 1:17மத் 23:37சங் 68:17அப் 1:11உபா 33:2எபி 12:18நியாயாதி 5:5லூக் 13:34 மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள். எபி 12:22பிலி 3:20வெளி 21:2மீகா 4:1-2வெளி 3:12ஏசா 66:10ஏசா 65:18சங் 87:3-6 அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது. ஏசா 54:1-5சங் 113:9ரூத் 4:14-161 சாமு 2:51 தீமோ 5:5ரூத் 1:11-132 சாமு 13:20ஏசா 49:21 சகோதரர்களே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம். கலா 4:23ரோம 9:8-9கலா 3:29ரோம 4:13-18அப் 3:25 ஆனாலும் சரீரத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. ஆதி 21:9ரோம 8:13கலா 5:111 தெச 2:14-15கலா 4:23எபி 10:33-34யோவா 15:9யோவா 3:5 அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுதந்திரமுள்ளவளுடைய மகனோடு வாரிசாக இருப்பதில்லை; ஆகவே, அடிமையானவளையும், அவளுடைய மகனையும் வெளியே தள்ளு என்று சொல்லுகிறது. ஆதி 21:10-12யோவா 8:35ரோம 8:15-17கலா 3:22கலா 3:8யாக் 4:5ரோம 11:2ரோம 11:7-11 இப்படியிருக்க, சகோதரர்களே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாக இல்லாமல், சுதந்திரமுள்ளவளுக்கே பிள்ளைகளாக இருக்கிறோம். கலா 5:1கலா 5:13யோவா 8:36யோவா 1:12-131 யோவா 3:1-2எபி 2:14-15