ஆமோஸ் 5

Amos 5
அத்தியாயம் 5

மனந்திரும்புதலுக்கான அழைப்பு

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள். எசேக் 19:1எரே 7:29எரே 9:10எரே 9:17ஆமோ 3:1ஆமோ 4:1ஆமோ 5:16எசேக் 19:14 இஸ்ரவேல் என்னும் கன்னிப்பெண் விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன்னுடைய தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளைத் தூக்கிவிடுகிறவர்கள் இல்லை. எரே 14:17ஓசி 14:12இராஜா 15:292இராஜா 17:16ஆமோ 7:2-5ஆமோ 8:14ஆமோ 9:11எசேக் 16:36-37 நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீதியாக இருப்பார்கள் என்று யெகோவாகிய தேவன் சொல்லுகிறார். எசேக் 12:16ஏசா 10:22ஏசா 6:13ரோம 9:27உபா 28:62உபா 4:27ஏசா 1:9ஆமோ 6:9 யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள். 2 நாளாக 15:2செப்ப 2:3எரே 29:12-13ஏசா 55:3சங் 14:2ஏசா 55:6-7மத் 7:8சங் 105:3-4 பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலிலும் சேராதீர்கள், பெயெர்செபாவுக்கும் போகாதீர்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான இடமாகவும் போகும். ஓசி 4:15ஆமோ 4:4ஆமோ 8:14ஆதி 21:331 கொரி 1:281 கொரி 2:6ஆமோ 7:17வெளி 18:17 யெகோவாவை தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அணைக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதை எரிக்கும். எசேக் 20:47-48எசேக் 33:11ஏசா 55:6ஆமோ 5:14ஆமோ 5:4ஆதி 48:8-20மாற் 9:43-48சகரி 10:6 நியாயத்தைக் கசப்பாக மாற்றி, நீதியைத் தரையிலே விழச்செய்கிறவர்களே அவரைத் தேடுங்கள். ஆமோ 6:12ஆமோ 5:11-12உபா 29:18எசேக் 3:20ஓசி 10:4செப்ப 1:6எசேக் 18:24எசேக் 33:12-13 அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம். ஆமோ 4:13யோபு 9:9ஆமோ 9:6ஆமோ 8:9சங் 104:20யோபு 38:31-32யாத் 10:21-23யோபு 12:22 பாதுகாப்பான இடத்தின்மேல் அழிவு வரும்படியாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாக இலகுவடையச் செய்கிறவர். 2இராஜா 13:172இராஜா 13:25எபி 11:34எரே 37:10மீகா 5:11 பட்டணத்தின் நுழைவுவாயிலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாகப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். 1 இராஜா 22:8ஏசா 29:21யோவா 8:45-47எரே 17:16-171 இராஜா 18:171 இராஜா 21:202 நாளாக 24:20-222 நாளாக 25:16 நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனுடைய கையிலே தானியத்தைச் சுமைசுமையாக வாங்குகிறபடியினால், நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சைத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. உபா 28:30மீகா 6:15செப்ப 1:13யாக் 2:6ஆகா 1:6வெளி 11:8-10ஆமோ 3:15மீகா 2:2 உங்களுடைய மீறுதல்கள் மிகுதியென்றும், உங்களுடைய பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, லஞ்சம் வாங்கி, பட்டணத்தின் நுழைவுவாயிலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள். ஆமோ 2:6-7ஆமோ 5:10ஏசா 1:231 சாமு 8:3அப் 7:52யாக் 5:4மல்கி 3:5சங் 26:9-10 ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாக இருக்கவேண்டும்; அந்தக்காலம் தீமையான காலம். 2 தீமோ 3:1பிரச 3:7எபே 5:15-16ஓசி 4:4மீகா 2:3ஆமோ 6:10பிரச 9:12எபே 6:13 நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார். யோசு 1:9மத் 6:33மீகா 3:11மீகா 6:8பிலி 4:8-92 தீமோ 4:221 நாளாக 28:20ஆதி 39:2-3 நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். ரோம 12:93 யோவா 1:11யோவே 2:14சங் 97:101 தெச 5:21-22மீகா 5:7-8ரோம 8:7மீகா 5:3 ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ, ஐயோ, என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள். யோவே 1:11எரே 9:17-20எரே 9:10ஆமோ 3:13ஆமோ 5:27ஆமோ 8:10ஏசா 15:2-5ஏசா 15:8 எல்லாத் திராட்சைதோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று யெகோவா சொல்லுகிறார். யாத் 12:12ஏசா 16:10எரே 48:33யாத் 12:23ஓசி 9:1-2ஏசா 32:10-12யோவே 3:17நாகூ 1:12

யெகோவாவுடைய நாள்

யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ, அதினால் உங்களுக்கு என்ன உண்டு? யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருளாக இருக்கும். யோவே 1:15யோவே 2:1-2யோவே 2:31எரே 30:7மல்கி 4:1ஏசா 24:11-12ஏசா 5:19ஏசா 5:30 சிங்கத்திற்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டிற்குள்ளே வந்து சுவரின்மேல் தன்னுடைய கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும். ஏசா 24:17-18எரே 15:2-3அப் 28:4எரே 48:43-441 இராஜா 20:29-30ஆமோ 9:1-2யோபு 20:24-25 யெகோவாவுடைய நாள் வெளிச்சமாக இல்லாமல், இருளும் பிரகாசமற்ற காரிருளுமாக இருக்குமல்லவோ? ஏசா 13:10எசேக் 34:12செப்ப 1:15யோபு 10:21-22யோபு 3:4-6யூதா 1:13மத் 22:13நாகூ 1:8 உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. ஏசா 1:11-16நீதி 28:9லேவி 26:31ஏசா 66:3எரே 6:20நீதி 15:8ஓசி 8:13ஆதி 8:21 உங்களுடைய தகனபலிகளையும் உணவுபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்களுடைய மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன். மீகா 6:6-7ஆமோ 4:4-5ஏசா 66:3லேவி 7:12-15சங் 107:21-22சங் 116:17சங் 50:23சங் 50:8-14 உன் பாடல்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். ஆமோ 6:5ஆமோ 8:10ஆமோ 8:3 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரட்டும். மீகா 6:8எரே 22:3நீதி 21:3ஓசி 6:6மாற் 12:32-34ஆமோ 5:14-15ஆமோ 5:7யோபு 29:12-17 இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருடங்கள்வரையில் பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ? அப் 7:42-43எசேக் 20:8நெகே 9:18எசேக் 20:16யோசு 24:14லேவி 17:7நெகே 9:21உபா 32:17-19 நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய சிலைகளின் பல்லக்கையும் சுமந்துகொண்டு வந்தீர்களே. 2இராஜா 23:12-13லேவி 20:2-51 இராஜா 11:33லேவி 18:21 ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோகச்செய்வேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள யெகோவா சொல்லுகிறார். 2இராஜா 17:6அப் 7:43ஆமோ 4:132இராஜா 15:29