வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதம்
“நீங்கள் உங்களுக்கு சிலைகளையும் உருவங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரம்வடித்த கல்லை வணங்குவதற்காக உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. லேவி 19:4உபா 27:15யாத் 23:24எண் 33:52யாத் 20:4-51 கொரி 10:19-20வெளி 13:14-15உபா 16:21-22 என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா. லேவி 19:30 “நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், உபா 28:1-14ஏசா 1:19உபா 11:13-15ஏசா 48:18-19சங் 81:12-16நியாயாதி 2:1-2மத் 7:24-25ரோம 2:7-10 நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யச்செய்வேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும். சகரி 8:12சங் 67:6ஏசா 30:23உபா 11:14உபா 28:12எசேக் 34:26-27எசேக் 36:30யோபு 5:10 திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள். ஆமோ 9:13யோவே 2:26யோவே 2:19லேவி 25:18-19உபா 11:151 தீமோ 6:17எசேக் 34:25-28நீதி 1:33 தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன்; தத்தளிக்கச் செய்பவர்கள் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாமல் ஒழியச்செய்வேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை. ஏசா 35:9செப்ப 3:13சங் 147:14ஓசி 2:18எரே 30:10எசேக் 34:25ஆகா 2:9சங் 29:11 உங்கள் எதிரிகளைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் எதிரிகள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். யோசு 23:10உபா 28:7உபா 32:301 நாளாக 11:20நியாயாதி 7:19-21எண் 14:91 சாமு 14:6-161 நாளாக 11:11 நான் உங்கள்மேல் கண்ணோக்கமாக இருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களோடே என் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன். ஆதி 17:6-7நெகே 9:23சங் 107:38எசேக் 16:62ஏசா 55:3ஆதி 28:3சங் 138:6-7உபா 28:11 போன வருடத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்திற்கு இடமுண்டாக, பழையதை அகற்றுவீர்கள். லேவி 25:222இராஜா 19:29லூக் 12:17யோசு 5:11 உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை நிறுவுவேன்; என் ஆத்துமா உங்களை வெறுப்பதில்லை. யாத் 25:8வெளி 21:3யாத் 29:45சங் 132:13-14எபே 2:22சங் 106:40சங் 76:2எசேக் 37:26-28 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாக இருப்பேன், நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள். 2 கொரி 6:16எரே 30:22எரே 7:23யாத் 6:7உபா 23:14யோவே 2:27எபி 11:16யாத் 19:5-6 நீங்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக இல்லாமல், நான் அவர்களுடைய தேசத்திலிருந்து உங்களைப் புறப்படச்செய்து, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா. எசேக் 34:27சங் 116:161 கொரி 6:19-20யாத் 20:2லேவி 25:38எரே 2:20லேவி 25:55சங் 81:6-10 “நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், உபா 28:15-68புலம் 2:17லேவி 26:18எரே 17:27மல்கி 2:2அப் 3:23எபி 12:25புலம் 1:18 என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறுவீர்களென்றால்: 2இராஜா 17:15உபா 31:16எசேக் 16:59ஏசா 24:5எரே 11:10எண் 15:31சகரி 7:11-131 தெச 4:8 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள். யோபு 31:8எரே 5:17மீகா 6:151 சாமு 2:33உபா 28:21-22உபா 28:32-35உபா 28:51ஆகா 1:6 நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் எதிரிகளுக்கு முன்பாக தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள். லேவி 17:10உபா 28:25லேவி 26:36-37நீதி 28:1சங் 53:5சங் 106:41-421 சாமு 31:1நியாயாதி 2:14 இந்தவிதமாக நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலிருந்தால், உங்கள் பாவங்களின் காரணமாக மேலும் ஏழுமடங்காக உங்களைத் தண்டித்து, லேவி 26:211 சாமு 2:5லேவி 26:24லேவி 26:28தானி 3:19நீதி 24:16சங் 119:164 உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். உபா 28:231 இராஜா 17:1ஏசா 25:111 சாமு 4:11தானி 4:37எசேக் 30:6எரே 13:9எரே 14:1-6 உங்கள் பெலன் வீணாகச் செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது. உபா 11:17சங் 127:1ஏசா 49:4ஆப 2:13லேவி 26:41 கொரி 3:6உபா 28:18உபா 28:38-40 “நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல் வரச்செய்து, லேவி 26:18லேவி 26:27 உங்களுக்குள்ளே வெளியின் கொடிய மிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகச்செய்யும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும். உபா 32:24எசேக் 14:15நியாயாதி 5:6சகரி 7:142 நாளாக 15:52இராஜா 17:25எசேக் 5:17ஏசா 33:8 “நான் கொடுக்கும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், எரே 2:30எரே 5:3ஆமோ 4:6-12எசேக் 24:13-14ஏசா 1:16-20லேவி 26:21 நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களின் காரணமாக ஏழுமடங்காக வாதித்து, சங் 18:262 சாமு 22:27ஏசா 63:10யோபு 9:4 என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரச்செய்து, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; எதிரியின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். எசேக் 5:17எண் 14:12உபா 28:21உபா 32:25எசேக் 14:17எசேக் 20:37எசேக் 29:8எசேக் 33:2 உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள். மீகா 6:14ஏசா 3:1சங் 105:16எசேக் 5:16எசேக் 14:13எசேக் 4:16ஆகா 1:6ஏசா 9:20 “இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமல், எனக்கு எதிர்த்து நடந்தால், லேவி 26:21லேவி 26:24 நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழுமடங்காகத் தண்டிப்பேன். எசேக் 5:13எசேக் 5:15எசேக் 8:18ஏசா 59:18எரே 21:5ஏசா 63:3ஏசா 66:15ஏசா 27:4 உங்கள் மகன்களின் மாம்சத்தையும் உங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள். உபா 28:53-57எசேக் 5:10புலம் 4:10மத் 24:192இராஜா 6:28-29எரே 19:9புலம் 2:20லூக் 23:29 நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை உடைத்து, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை வெறுக்கும். 2இராஜா 23:20எசேக் 6:13எசேக் 6:3-6ஏசா 27:92 நாளாக 34:3-71 இராஜா 13:22 நாளாக 14:3-52 நாளாக 23:17 நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழாக்கி, உங்கள் நறுமண வாசனையை முகராமலிருப்பேன். நெகே 2:32இராஜா 25:4-10ஆமோ 5:21-23எசேக் 9:6ஆதி 8:21எபி 10:26ஏசா 1:11-14எரே 4:7 நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் எதிரிகள் பிரமிப்பார்கள். எரே 9:11எரே 18:16எரே 19:8எரே 25:111 இராஜா 9:8உபா 28:37எசேக் 5:15எரே 25:18 தேசங்களுக்குள்ளே உங்களைச் சிதறடித்து, உங்களுக்குப் பின்னே பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்திரமுமாகும். உபா 4:27எசேக் 20:23சகரி 7:14உபா 28:64-66எசேக் 22:15சங் 44:11எசேக் 12:14-16எரே 9:16 “நீங்கள் உங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாட்களெல்லாம் தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும். 2 நாளாக 36:21லேவி 25:2-4லேவி 26:43லேவி 25:10 நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருடங்களில் ஓய்வடையாததினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாட்களெல்லாம் ஓய்வடைந்திருக்கும். ஏசா 24:5-6ரோம 8:22 உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள். எசேக் 21:7ஏசா 30:17லேவி 26:171 சாமு 17:242 நாளாக 14:142இராஜா 7:6-7உபா 28:65-67எசேக் 21:12 துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் எதிரிகளுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இருக்காது. நியாயாதி 2:14யோசு 7:12-131 சாமு 14:15-16ஏசா 10:4நியாயாதி 7:22எரே 37:10எண் 14:42 அன்னியர்களுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் எதிரிகளின் தேசம் உங்களை அழிக்கும். உபா 28:48உபா 28:68உபா 4:26-27ஏசா 27:13எரே 42:17-18எரே 42:22எரே 44:12-14எரே 44:27-28 உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினாலேயும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலேயும், உங்கள் எதிரிகளின் தேசங்களில் சோர்ந்துபோவார்கள். எசேக் 4:17எசேக் 24:23எசேக் 33:10உபா 28:65யாத் 20:5எசேக் 6:9மத் 23:35-36உபா 30:1 “அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம் செய்து நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் முன்னோர்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமல்லாமல், நீதி 28:131 யோவா 1:8-10நெகே 9:2-5ஓசி 5:15எண் 5:71 இராஜா 8:33-36உபா 30:1-31 இராஜா 8:47 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்ததினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய எதிரிகளின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்திற்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், 2 நாளாக 12:6-7அப் 7:51எசேக் 44:71 இராஜா 21:29எரே 4:4எரே 9:25-262 நாளாக 32:26கொலோ 2:11 நான் யாக்கோபோடே செய்த என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன். யாத் 2:24யாத் 6:5எசேக் 16:60சங் 106:45சங் 136:23உபா 4:31எசேக் 36:1-15எசேக் 36:33-34 தேசம் அவர்களாலே கைவிடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்ததினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள். லேவி 26:15லேவி 26:34-35ரோம 8:71 இராஜா 8:46-482 நாளாக 33:122 நாளாக 36:14-162இராஜா 17:7-17ஆமோ 5:10 அவர்கள் தங்கள் எதிரிகளின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்குவதற்கோ, நான் அவர்களோடே செய்த என் உடன்படிக்கையை நிராகரிப்பதற்கோ, நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட்டேன்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா. ரோம 11:22இராஜா 13:23உபா 4:29-31நெகே 9:31சங் 94:14எசேக் 14:22-23எசேக் 16:60எரே 14:21 அவர்களுடைய தேவனாக இருக்கும்படிக்கு, நான் அன்னிய மக்களின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களுடன் நான் செய்த உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூருவேன்; நான் யெகோவா என்று சொல் என்றார். லேவி 25:38எசேக் 20:22எசேக் 20:9லேவி 22:33சங் 98:2-3எசேக் 20:14ரோம 11:28-292 கொரி 3:15-16 யெகோவா தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. லேவி 27:34உபா 12:1உபா 6:1உபா 13:4லேவி 25:1யோவா 1:17லேவி 7:38லேவி 8:36