ஏசாயா 53

Isaiah 53
அத்தியாயம் 53

எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? யோவா 12:38ரோம 10:16-171 கொரி 1:18யோவா 1:12மத் 16:171 கொரி 1:24மத் 11:25ஏசா 52:10 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. பிலி 2:6-7ஏசா 52:14ஏசா 11:1யோவா 1:10-14மாற் 6:3எசேக் 17:22-24எரே 23:5யோவா 19:14-15 அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு 1 அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். யோவா 1:10-11மத் 26:67எபி 12:2-3ஏசா 53:10ஏசா 49:7சங் 22:6-8ஏசா 53:4மாற் 14:34 உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். 1 பேது 2:24மத் 8:17கலா 3:131 யோவா 2:21 பேது 3:18ஏசா 53:5-6எபி 9:28ஏசா 53:11-12 நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 1 பேது 2:24-251 பேது 3:18மத் 20:282 கொரி 5:21ரோம 5:6-10ஏசா 53:10-12எபி 10:14எபி 9:12-15 நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். 1 பேது 2:251 பேது 3:18சங் 119:176ஏசா 55:7ரோம 4:25ரோம 3:10-19யாக் 5:20மத் 18:12-14 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார். அப் 8:32-33மத் 26:631 பேது 2:23மாற் 14:61யோவா 19:9மத் 27:12-14லூக் 23:9மாற் 15:5 துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார். 1 பேது 3:18அப் 8:33யோவா 19:7மத் 26:65-66யோவா 11:49-52சங் 22:12-21ஏசா 53:12ஏசா 53:5 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 1 பேது 2:22மத் 27:57-601 யோவா 3:5மாற் 15:43-462 கொரி 5:21லூக் 23:50-53யோவா 19:38-42ஏசா 42:1-3 யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 2 கொரி 5:21ரோம 8:32கலா 3:13சகரி 13:7எபே 1:51 யோவா 4:9-10எபி 10:6-12ஏசா 53:3-6 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். ரோம 5:18-191 பேது 2:24ஏசா 53:4-6வெளி 5:9-101 பேது 3:18ஏசா 53:12யோவா 12:27-32யோவா 17:3 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். லூக் 22:37எபி 9:28லூக் 23:32-34மாற் 15:271 யோவா 2:12கொலோ 1:13-141 தீமோ 2:5-6எபி 9:26