வெளிப்படுத்தின விசேஷம் 5

Revelation 5
அத்தியாயம் 5

புத்தகச் சுருளும், ஆட்டுக்குட்டியும்

பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன். எசேக் 2:9-10ஏசா 29:11வெளி 5:7தானி 12:4-9வெளி 6:1வெளி 10:2வெளி 5:13வெளி 10:8-11 புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன். ஏசா 29:11-12வெளி 5:5வெளி 10:1ஏசா 41:22-23சங் 103:20வெளி 18:21 வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது. வெளி 5:13ஏசா 40:13-14ரோம 11:34ஏசா 41:28 ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன். தானி 12:8-9வெளி 4:1 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். ஏசா 11:1எரே 23:5-6வெளி 22:16ரோம 15:12எபி 7:14ஏசா 11:10ரோம 1:3ஆதி 49:9-10 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே. சகரி 4:10யோவா 1:29வெளி 5:12சகரி 3:9யோவா 1:36வெளி 13:8தானி 7:14ஏசா 53:7-8 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார். வெளி 5:1வெளி 4:2-3 அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து: சங் 141:2வெளி 8:3-4பிலி 2:9-11வெளி 4:10சங் 33:2வெளி 14:2-3வெளி 5:14வெளி 4:4

“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; 1 பேது 1:18-191 யோவா 1:7மத் 26:28ரோம 3:24-26சங் 40:3வெளி 14:6வெளி 5:121 கொரி 6:20

ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து

எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; வெளி 1:6தானி 7:27தானி 7:18வெளி 20:6வெளி 22:51 பேது 2:5-9யாத் 19:6

நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது. தானி 7:10எபி 12:22சங் 148:2வெளி 4:4வெளி 4:6சங் 68:17வெளி 19:62இராஜா 6:16-18 அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள். வெளி 5:9வெளி 19:1வெளி 4:11யோவா 17:22 கொரி 8:9வெளி 7:12மத் 28:18யோவா 1:29 அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். பிலி 2:101 நாளாக 29:11சங் 148:2-13வெளி 5:121 பேது 5:11ரோம 11:36ஏசா 42:10சங் 96:11-13 அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள். வெளி 19:4வெளி 4:9-11வெளி 5:8வெளி 5:6வெளி 7:12