ஜீவநதி
பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான். வெளி 7:17யோவா 4:14யோவா 7:38-39சங் 36:8-9யோவா 4:10-11வெளி 21:6சகரி 14:8சங் 46:4 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள். வெளி 22:11 பேது 2:24வெளி 2:7எசேக் 47:8-12ஆதி 2:9வெளி 22:14ஆதி 3:22-24நீதி 3:18 இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். மத் 25:21வெளி 21:3-4யோவா 12:26வெளி 7:15-17யோவா 14:3எசேக் 37:27சகரி 14:11சங் 17:15 அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். மத் 5:8வெளி 14:1வெளி 3:121 யோவா 3:2-3எபி 12:14யோபு 33:261 கொரி 13:12யோவா 17:24 அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். தானி 7:18ஏசா 60:19-20வெளி 20:41 பேது 1:3-4தானி 7:27சங் 36:9ரோம 5:17வெளி 21:22-25 பின்பு, தேவதூதன் என்னைப் பார்த்து: “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமானவைகள், சீக்கிரமாக நடக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டும்படி, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்”. வெளி 1:1வெளி 21:5வெளி 19:9ரோம 1:22 பேது 1:21அப் 3:18லூக் 1:702 பேது 3:2
இயேசு சீக்கிரமாக வருகிறார்
“இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான்” என்றார். வெளி 1:3வெளி 3:11வெளி 22:20வெளி 22:12வெளி 22:9-10வெளி 16:15 யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். வெளி 19:10வெளி 1:1வெளி 19:19 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். வெளி 19:10கொலோ 2:18-19வெளி 14:71 யோவா 5:20வெளி 4:10உபா 4:19யாத் 34:14யோவா 4:22-23 அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது. தானி 8:261 பேது 4:7வெளி 1:3வெளி 10:4மத் 10:27எசேக் 12:23தானி 12:4தானி 12:9 “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். தானி 12:10நீதி 4:18எசேக் 3:272 தீமோ 3:13மத் 15:14யோபு 17:9மத் 5:6மத் 25:10 இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது. மத் 16:27ஏசா 62:11ஏசா 40:101 கொரி 3:14வெளி 22:71 கொரி 3:8ரோம 2:6-11ரோம 14:12 நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். வெளி 1:8வெளி 21:6ஏசா 44:6ஏசா 48:12ஏசா 41:4வெளி 1:17வெளி 1:11 ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளி 21:271 யோவா 5:31 யோவா 3:23-24வெளி 22:71 யோவா 3:3வெளி 2:7யோவா 14:151 கொரி 7:19 நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள். வெளி 21:8கலா 5:19-21பிலி 3:21 கொரி 6:9-10வெளி 21:27வெளி 9:20-21கொலோ 3:6யோவா 3:18-21 இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார். வெளி 5:52 பேது 1:19ஏசா 11:1வெளி 1:4ரோம 1:3-4மத் 22:42வெளி 22:20மத் 2:2 ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும். யோவா 4:14வெளி 21:6ஏசா 55:1-3யோவா 7:37ஏசா 12:3யோவா 4:10சங் 34:8வெளி 22:1 இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். உபா 12:32உபா 4:2நீதி 30:6வெளி 1:3வெளி 22:7மத் 15:6-9லேவி 26:18லேவி 26:24-25 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். உபா 4:2லூக் 11:52வெளி 22:2சங் 69:28வெளி 1:3வெளி 21:2வெளி 21:22-27யாத் 32:33 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.” வெளி 22:7எபி 9:28வெளி 22:122 தீமோ 4:81 கொரி 16:22ஏசா 25:9வெளி 1:2வெளி 22:10 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். 2 தெச 3:18ரோம 16:202 கொரி 13:14எபே 6:23-24வெளி 1:4ரோம 1:7ரோம 16:23