வெளிப்படுத்தின விசேஷம் 16

Revelation 16
அத்தியாயம் 16

தேவனுடைய கோபக்கலசங்கள்

அப்பொழுது தேவாலயத்திலிருந்து வந்த ஒரு பெரியசத்தம் அந்த ஏழு தூதர்களிடம்: நீங்கள் போய் ஏழு கலசங்களிலும் உள்ள தேவனுடைய கோபத்தை பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்வதைக்கேட்டேன். செப்ப 3:8எரே 10:25வெளி 15:1சங் 79:6வெளி 16:17வெளி 15:5-8வெளி 16:2-12மத் 13:41-42 முதலாம் தூதன் போய், தன் கலசத்தில் இருந்ததை பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களும் அதின் உருவத்தை வணங்குகிற மனிதர்களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டானது. வெளி 8:7வெளி 16:11வெளி 13:15-18உபா 28:27யாத் 9:8-11லூக் 16:20-221 சாமு 5:61 சாமு 5:9 இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின. யாத் 7:17-21வெளி 8:8-9வெளி 11:6சங் 105:29சங் 78:44எசேக் 16:38ஆதி 7:22வெளி 10:2 மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாக மாறியது. யாத் 7:17-20வெளி 8:10-11ஓசி 13:15வெளி 14:7ஏசா 50:2வெளி 16:5யாத் 8:5எசேக் 35:8 அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: வெளி 1:8வெளி 11:17வெளி 1:4சங் 145:172 தெச 1:5-6ஆதி 18:25சங் 129:4வெளி 15:3-4

இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர்

இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.

அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் ஏசா 49:26வெளி 11:18வெளி 6:10-11லூக் 11:49-50வெளி 18:242இராஜா 24:4மத் 23:30-37வெளி 13:15

தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால்,

இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்;

அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்வதைக்கேட்டேன். பலிபீடத்திலிருந்து வேறொருவன்: வெளி 19:2வெளி 6:9வெளி 15:3-4ஏசா 6:6வெளி 8:3-5வெளி 14:18எசேக் 10:2எசேக் 10:7

ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே,

உம்முடைய நியாயத்தீர்ப்புகள்

சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.

நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனிதர்களைச் சுடுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அப் 2:20யோனா 4:8லூக் 21:25வெளி 14:18வெளி 7:16ஏசா 24:23மத் 13:6வெளி 6:12 அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சுடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை. வெளி 16:21வெளி 2:21எரே 5:3லூக் 13:5வெளி 11:13வெளி 16:10-11லூக் 13:3ஆமோ 4:6-12 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்களுடைய நாக்குகளைக் கடித்துக்கொண்டு, வெளி 9:2மத் 8:12யாத் 10:21-23ஏசா 8:21-22மத் 22:13வெளி 13:2-4வெளி 17:17வெளி 18:23 தங்களுடைய வருத்தங்களாலும், தங்களுடைய புண்களாலும், பரலோகத்தின் தேவனை அவமதித்தார்களேதவிர, தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை. வெளி 16:9வெளி 11:13வெளி 16:2வெளி 16:21வெளி 2:21சங் 136:262 தீமோ 3:13தானி 2:18-19 ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது. வெளி 9:14எரே 51:36ஏசா 41:25ஏசா 44:27ஏசா 11:15ஏசா 42:15எரே 50:38-40தானி 11:43-45 அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன். வெளி 19:202 தெச 2:9-111 யோவா 4:1-3வெளி 20:10வெளி 13:11-18வெளி 16:141 தீமோ 4:1-3யாத் 8:2-7 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது. வெளி 17:141 தீமோ 4:1வெளி 20:81 யோவா 5:192 கொரி 11:13-15யாக் 3:152 தெச 2:9யோவா 8:44 இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். 1 தெச 5:2-3மத் 24:42-432 பேது 3:10வெளி 3:18வெளி 3:3-4லூக் 12:37-43மத் 25:13மாற் 13:33-37 அப்பொழுது எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன. சகரி 12:11நியாயாதி 5:19யோவே 3:9-142இராஜா 23:29-30வெளி 17:14வெளி 19:17-21வெளி 9:11யோவா 19:13 ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது. யோவா 19:30வெளி 21:6எபே 2:2எபே 6:12தானி 12:7-13வெளி 10:6-7வெளி 15:5-6வெளி 11:15 சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனிதர்கள் உண்டான நாளிலிருந்து அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானது இல்லை. தானி 12:1வெளி 4:5வெளி 11:13வெளி 11:19மத் 24:21வெளி 6:12வெளி 8:5 அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது. வெளி 17:18வெளி 18:5வெளி 18:10வெளி 18:21வெளி 18:16-19வெளி 18:2தானி 4:30எரே 25:15-16 தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது. வெளி 6:14வெளி 20:11ஏசா 2:14-17எரே 4:23-25 நாற்பது கிலோ எடையுள்ள பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினால் மனிதர்கள் தேவனை அவமதித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாக இருந்தது. வெளி 11:19யோசு 10:11வெளி 16:9வெளி 16:11வெளி 8:7யாத் 9:23-26எசேக் 13:11எசேக் 13:13