வெளிப்படுத்தின விசேஷம் 19

Revelation 19
அத்தியாயம் 19

தேவனை மகிமைப்படுத்துதல்

இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: வெளி 7:10-12வெளி 11:151 நாளாக 29:11மத் 6:13வெளி 5:9-13வெளி 19:3-4வெளி 12:10சங் 148:1

“அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும்

கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது;

அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.

தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, உபா 32:43வெளி 6:10உபா 32:35வெளி 16:5-7வெளி 18:20வெளி 15:3சங் 19:9வெளி 18:3

தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள். மறுபடியும் அவர்கள்: ஏசா 34:10வெளி 18:18வெளி 14:11வெளி 18:9ஆதி 19:28யூதா 1:7வெளி 19:1

“அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.

இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து: வெளி 5:14நெகே 8:6சங் 106:481 நாளாக 16:36எரே 28:6நெகே 5:13சங் 41:13சங் 72:19

ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, சங் 134:1சங் 148:11-13சங் 150:6சங் 135:1வெளி 11:18-19வெளி 7:15சங் 103:20-22சங் 135:19-20

அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே,

நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்”

என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.

அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், சங் 97:1வெளி 14:2சங் 29:3-9சங் 93:1சங் 99:1எசேக் 1:24வெளி 1:15வெளி 19:1

பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி:

அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். வெளி 21:2வெளி 21:9வெளி 19:92 கொரி 11:2மத் 22:2எபே 5:32யோவா 3:29எபே 5:23

ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது,

அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.

சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. ஏசா 61:10வெளி 7:13-14எபே 5:26-27சங் 132:9எசேக் 16:10மத் 22:12மாற் 9:3வெளி 3:18 பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். லூக் 14:15-16வெளி 22:6மத் 22:2-4வெளி 1:19வெளி 19:7-8வெளி 21:5ஆப 2:2ஏசா 8:1 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான். அப் 10:25-26வெளி 22:8-9யோவா 5:39எபி 1:14யாத் 34:14வெளி 4:102 பேது 1:19-211 பேது 1:10-12

வெள்ளைக் குதிரையின்மேல் ஏறியிருந்தவர்

பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். சங் 96:13ஏசா 11:3-5சங் 98:9சங் 50:6வெளி 6:2எரே 23:5-6ஏசா 32:1எரே 33:15 அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது. வெளி 19:16லூக் 10:22மத் 11:27வெளி 1:14வெளி 2:17-18மத் 28:18எபி 2:9ஏசா 9:6 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே. யோவா 1:1ஏசா 63:1-6யோவா 1:14சங் 58:10வெளி 14:201 யோவா 1:1ஏசா 9:51 யோவா 5:7 பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். யூதா 1:14வெளி 7:9வெளி 17:14வெளி 19:8மத் 28:3வெளி 19:11வெளி 3:4வெளி 4:4 அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார். ஏசா 63:2-6வெளி 1:16வெளி 2:272 தெச 2:8சங் 2:9ஏசா 11:4வெளி 19:21வெளி 12:5 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. வெளி 17:141 தீமோ 6:15தானி 2:47பிலி 2:9-11வெளி 19:12-13சங் 72:11வெளி 2:17நீதி 8:15-16 பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து: வெளி 19:21வெளி 8:13எசேக் 39:17-20எரே 12:9ஏசா 34:1-8ஏசா 56:9வெளி 14:6 நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான். எசேக் 39:18-201 சாமு 17:46வெளி 6:151 சாமு 17:44உபா 28:26எரே 16:4எரே 19:7எரே 34:20 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன். வெளி 16:16வெளி 16:14தானி 8:25தானி 11:40-45தானி 7:21-26வெளி 17:12-14வெளி 18:9எசேக் 38:8-18 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். வெளி 20:10வெளி 21:82 தெச 2:8-11தானி 7:7-14வெளி 20:14-15ஏசா 30:33வெளி 14:10உபா 29:23 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன. வெளி 19:11-15வெளி 1:16வெளி 19:17-19வெளி 17:16