ஆட்டுக்குட்டியானவரும் அவருடைய கூட்டத்தினரும்
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன். யோவே 2:32வெளி 3:12வெளி 7:3-17லூக் 12:8எபி 12:22-24வெளி 5:5-9மீகா 4:7வெளி 5:12-13 அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. வெளி 5:8எசேக் 43:2வெளி 1:15வெளி 11:15வெளி 15:22 சாமு 6:5யாத் 19:16சங் 150:3-6 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது. வெளி 5:9வெளி 14:1வெளி 15:3ஏசா 42:10சங் 149:1சங் 98:1சங் 40:3வெளி 2:17 பெண்களால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனிதர்களில் இருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். 2 கொரி 11:2வெளி 3:4யாக் 1:18யோவா 10:27யோவா 12:26வெளி 5:91 கொரி 6:20வெளி 7:15-17 இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள். எபே 5:27சங் 32:2செப்ப 3:131 பேது 3:10யோவா 1:47யூதா 1:24கொலோ 1:22சங் 34:13
மூன்று தேவதூதர்கள்
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, மாற் 16:15எபே 3:9-11வெளி 8:13சங் 139:24ஏசா 51:6ஏசா 51:8ரோம 16:25தானி 6:25-26 அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான். யாத் 20:11வெளி 15:4நெகே 9:6வெளி 4:11வெளி 11:18பிரச 12:13-14சங் 146:5-6அப் 17:23-25 வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். ஏசா 21:9எரே 51:7-8வெளி 18:2-3வெளி 16:19வெளி 11:8வெளி 17:18வெளி 17:2-6வெளி 18:10-11 அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ, வெளி 14:11வெளி 14:6-8எரே 44:4வெளி 13:3-6வெளி 13:11-17 அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். ஏசா 51:17சங் 75:8வெளி 16:19எரே 25:15-17சங் 11:6வெளி 18:6வெளி 19:20வெளி 20:10 அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. ஏசா 34:10வெளி 19:3மத் 25:46மத் 25:41வெளி 20:10ஏசா 33:14லூக் 16:23-24மாற் 9:43-49 தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான். வெளி 13:10வெளி 12:17வெளி 3:102 தீமோ 4:7வெளி 3:8 பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது; அவர்கள் தங்களுடைய வேலைகளில் இருந்து ஒய்வெடுப்பார்கள்; அவர்களுடைய செய்கைகள் அவர்களோடு கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லியது. வெளி 20:61 தெச 5:102 தீமோ 4:7-8எபி 4:9-111 கொரி 15:58எபி 6:10-11வெளி 19:91 தெச 4:16
பூமியின் அறுவடை
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன். தானி 7:13ஏசா 19:1எபி 2:9லூக் 21:27மத் 17:5சங் 21:3சங் 97:2வெளி 1:13 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரைப் பார்த்து: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, எனவே உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். யோவே 3:13மாற் 4:29எரே 51:33மத் 13:39மத் 13:30வெளி 14:181 தெச 2:16மத் 23:32 அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைச்சல் அறுக்கப்பட்டது. மத் 16:27வெளி 14:14வெளி 14:19வெளி 16:1-21யோவா 5:22-23 பின்பு வேறொரு தூதனும் கூர்மையான அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். வெளி 16:1வெளி 14:14-15வெளி 14:18வெளி 15:5-6 அக்கினியின்மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கூர்மையான அரிவாளைப் பிடித்திருக்கிறவனைப் பார்த்து: பூமியின் திராட்சைப்பழங்கள் பழுத்திருக்கிறது, கூர்மையான உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று அதிக சத்தத்தோடு சொன்னான். யோவே 3:13வெளி 16:8வெளி 14:15-16வெளி 6:9-10 அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்; உபா 32:32-33வெளி 19:15-21 நகரத்திற்கு வெளியே உள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து முந்நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்களின் உயரம்வரைக்கும் பெருகிவந்தது. புலம் 1:15எபி 13:11-12ஏசா 63:1-3வெளி 19:14-21ஏசா 66:24வெளி 11:8எசேக் 39:17-21ஏசா 34:5-7