சங்கீதங்கள் 11

Psalms 11
சங்கீதம் 11

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; ஏசா 26:3-4சங் 56:111 சாமு 23:14சங் 25:2லூக் 13:312 நாளாக 16:8நீதி 6:5சங் 16:1

பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி,

பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, எரே 9:3சங் 21:12சங் 37:14சங் 64:3-51 சாமு 18:211 சாமு 23:9மத் 26:4சங் 10:2

செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, சங் 82:52 தீமோ 2:19ஏசா 58:12சங் 75:3அப் 4:24-332இராஜா 19:13-182 நாளாக 32:13-15தானி 3:15-18

நீதிமான் என்ன செய்வான்?

யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; சங் 103:19சங் 18:6சங் 2:4ஆப 2:20ஏசா 66:1எரே 23:24சங் 33:13சங் 34:15-16

யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது;

அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.

யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; நீதி 6:16-19யாக் 1:12சங் 7:91 பேது 1:7ஆதி 22:1சங் 21:8சங் 26:2சங் 5:4-5

துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; எசேக் 38:22ஆதி 19:24எசேக் 13:13லூக் 17:29சங் 75:8யோபு 18:15யோபு 20:23ஆப 2:16

நெருப்பும், கந்தகமும்,

அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; வெளி 22:4சங் 17:151 பேது 3:12சங் 45:71 யோவா 3:2யோபு 36:7சங் 33:18சங் 34:15

அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.