2 இராஜாக்கள் 19

2 Kings 19
அத்தியாயம் 19

எருசலேமின் விடுதலை முன்னறிவிக்கப்படுதல்

ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல் ஆடையை அணிந்துகொண்டு, யெகோவவுடைய ஆலயத்தில் பிரவேசித்து, 1 இராஜா 21:272இராஜா 18:372 நாளாக 32:20-22ஆதி 37:34ஏசா 37:1-7யோபு 1:20-211 இராஜா 21:291 சாமு 4:12 அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல் ஆடையை அணிந்துகொண்டவர்களாக அனுப்பினான். ஏசா 1:1ஏசா 2:12 நாளாக 26:222இராஜா 18:182இராஜா 22:13-14ஏசா 37:2-5லூக் 3:4மத் 4:14 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவநேரம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை. ஏசா 66:9எரே 30:5-7எபி 3:15-16ஓசி 13:13ஏசா 26:17-182இராஜா 18:29ஓசி 5:15சங் 123:3-4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் எஜமானால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளுக்காக தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாக இருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். 2 சாமு 16:12எசேக் 36:37யாக் 5:16-17யோசு 14:12ரோம 9:271 சாமு 14:61 சாமு 17:452 நாளாக 28:5-6 இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர்கள் ஏசாயாவிடம் வந்து சொன்னார்கள். அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். 2இராஜா 18:172இராஜா 18:35ஏசா 37:6-382 நாளாக 20:152 நாளாக 20:172இராஜா 18:302இராஜா 6:16உபா 20:1 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான். 2இராஜா 7:62 நாளாக 32:21ஏசா 10:16-18ஏசா 11:4ஒபதி 1:1சங் 18:14-152இராஜா 19:35-37எரே 49:14 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான். 2இராஜா 18:14யோசு 10:292இராஜா 8:22ஏசா 37:8-9யோசு 12:11யோசு 12:15யோசு 15:39யோசு 15:42 இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: 1 சாமு 23:272இராஜா 18:17ஏசா 37:9 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே. 2இராஜா 18:52இராஜா 18:29-302 நாளாக 32:15-19ஏசா 37:10-14 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? 2 நாளாக 32:13-142இராஜா 17:5-112இராஜா 19:17-18ஏசா 10:8-11 என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்தது உண்டோ? 2இராஜா 17:6எசேக் 27:23ஆதி 11:31ஏசா 37:121 நாளாக 5:262இராஜா 18:33-34அப் 7:4ஆதி 2:8 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் ராஜாக்களும் எங்கே என்று சொல்லுங்கள் என்றான். 2இராஜா 18:342இராஜா 17:24ஏசா 11:11ஏசா 37:13-20எரே 39:5எரே 49:23எண் 13:21எண் 34:8

எசேக்கியாவின் ஜெபம்

எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து, ஏசா 37:14சங் 123:1-4சங் 91:1-21 இராஜா 8:28-30எஸ்றா 9:5சங் 74:10-11 யெகோவாவை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். 1 இராஜா 18:392இராஜா 5:15தானி 4:34-35தானி 9:3-4யாத் 25:22ஏசா 44:6ஏசா 44:8எரே 10:10-12 யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை ஏளனம் செய்யும்படி சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும். 2 நாளாக 6:402இராஜா 19:4ஏசா 37:17சங் 31:21 இராஜா 8:29தானி 9:18எபி 11:26ஏசா 37:4 யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த மக்களையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, 1 நாளாக 5:261 கொரி 14:252இராஜா 16:92இராஜா 17:242இராஜா 17:6அப் 4:27தானி 2:47ஏசா 10:9-11 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள். அப் 17:29ஏசா 44:9-20எரே 10:3-92 சாமு 5:21ஏசா 37:18-19ஏசா 46:1-2எரே 10:14-16சங் 115:4-8 இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே தேவனாகிய யெகோவா என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான். சங் 83:181 இராஜா 8:43சங் 67:1-21 இராஜா 18:36-371 இராஜா 20:281 சாமு 17:45-47தானி 4:34-37யாத் 9:15-16

சனகெரிப்பின் தோல்வியைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனம்

அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பினிமித்தம் நீ என்னை நோக்கிச் செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். 2இராஜா 20:52 நாளாக 32:20-211 யோவா 5:14-15அப் 10:31ஏசா 65:24எரே 33:32 சாமு 15:31அப் 10:4 அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது: புலம் 2:13எரே 14:17யோபு 16:4மத் 27:39ஏசா 37:21-35புலம் 2:15சங் 109:25சங் 22:7-8

“சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து,

உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி

உன் பின்னாலே தலையை அசைக்கிறாள்.

“யாரை அவமதித்து தூஷித்தாய்? ஏசா 5:24சங் 71:222 தெச 2:4ஏசா 30:11-12ஏசா 30:15எரே 51:52 கொரி 10:52இராஜா 18:28-35

யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்?

நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ

உன் கண்களைப் பெருமையாக ஏறெடுத்தாய்?

உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து: 2இராஜா 18:17சங் 20:7ஏசா 10:182 நாளாக 26:102 நாளாக 32:172இராஜா 18:232இராஜா 18:33-34எசேக் 31:3-18

என் இரதங்களின் திரளினாலே

நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்;

அதின் உயரமான கேதுருமரங்களையும்,

உச்சிதமான தேவதாரு மரங்களையும் நான் வெட்டி,

அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,

நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; 1 இராஜா 20:102 சாமு 17:13தானி 4:30யாத் 15:9ஏசா 19:6

என் உள்ளங்கால்களினால்

பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய்.

நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி, ஏசா 45:7ஏசா 10:5-6ஏசா 37:26-27ஏசா 46:10-11அப் 4:27-28ஏசா 10:15ஏசா 54:16சங் 33:11

ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ?

இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப்

பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.

அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து, 1 பேது 1:24ஏசா 40:6-8யாக் 1:10-11எரே 37:10எரே 50:36-37எரே 51:30எரே 51:32எண் 11:23

கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும்,

பச்சிலைக்கும்,

வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.

உன் உட்காருதலையும், போக்கையும், ஏசா 37:28-29எரே 23:23-24உபா 28:6சங் 121:8சங் 139:1-11உபா 28:19

வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, எசேக் 29:42இராஜா 19:33எசேக் 38:4ஆமோ 4:2ஏசா 30:28யோபு 41:22இராஜா 19:36-37அப் 7:51

வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால்,

நான் என் கொக்கியை உன் மூக்கிலும்

என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு,

நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று

அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.”

உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களை சாப்பிடுவீர்கள். லேவி 25:20-222இராஜா 20:8-9யாத் 3:12ஏசா 37:30லூக் 2:121 சாமு 2:34ஏசா 7:11-14லேவி 25:4-5 யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 2இராஜா 19:4ஏசா 27:62 நாளாக 32:22-23ஏசா 10:20-22ஏசா 1:9ஏசா 37:31-32சங் 80:9 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும். ஏசா 9:7ஏசா 10:20யோவா 2:17ரோம 11:5ரோம 9:27எசேக் 20:9எசேக் 5:13ஏசா 59:17 ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராக முற்றுகை போடுவதுமில்லை. 2 சாமு 20:15ஏசா 8:7-10எசேக் 21:22ஏசா 10:24-25ஏசா 10:28-32ஏசா 37:33-35லூக் 19:43-44 அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். 2இராஜா 19:282இராஜா 19:36 என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். 1 இராஜா 11:12-132இராஜா 20:61 இராஜா 15:4ஏசா 31:5எரே 33:26ஏசா 38:6எரே 23:5-6எரே 33:21 அன்று இரவில் சம்பவித்தது என்னவென்றால்: யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியர்களின் முகாமில் லட்சத்தெண்பத்து ஐயாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அதிகாலையில் எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரதேங்களாகக் கிடந்தார்கள். 2 நாளாக 32:21-222 சாமு 24:16யாத் 12:29-30ஏசா 37:361 தெச 5:2-3சங் 76:5-7அப் 12:23தானி 5:30 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். யோனா 1:22இராஜா 19:282இராஜா 19:332இராஜா 19:7ஆதி 10:11-12யோனா 3:2-10மத் 12:41நாகூ 1:1 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய மகன்களாகிய அத்ரமலேக்கும், சரேத்சேரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவனுடைய மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான். எஸ்றா 4:2ஆதி 8:42இராஜா 19:7எரே 51:272 நாளாக 32:142 நாளாக 32:192 நாளாக 32:212இராஜா 18:30