2 இராஜாக்கள் 20

2 Kings 20
அத்தியாயம் 20

எசேக்கியாவின் வியாதி

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான். ஏசா 38:1-222 நாளாக 32:24-26பிலி 2:27யோனா 3:4-102இராஜா 19:202 சாமு 17:23எரே 18:7-10பிலி 2:30 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவவை நோக்கி: சங் 50:151 இராஜா 8:30ஏசா 38:2-3மத் 6:6 ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான். நெகே 13:14நெகே 13:222இராஜா 18:3-6நெகே 5:191 யோவா 3:21-22நெகே 13:31லூக் 1:61 இராஜா 8:61 ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, யெகோவவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது: 1 இராஜா 7:82இராஜா 22:14 நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவாய். சங் 66:19-20ஏசா 38:51 சாமு 9:162இராஜா 19:20சங் 39:12சங் 126:5சங் 147:3யாக் 5:14-15 உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல் என்றார். 2இராஜா 19:34அப் 27:24ஏசா 10:242 நாளாக 32:22சங் 116:15 பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். ஏசா 38:212இராஜா 2:20-222இராஜா 4:41 எசேக்கியா ஏசாயாவை நோக்கி: யெகோவ என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான். ஏசா 7:11நியாயாதி 6:172இராஜா 19:292இராஜா 20:5ஓசி 6:2ஏசா 38:22ஏசா 7:14நியாயாதி 6:37-40 அதற்கு ஏசாயா: யெகோவ தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, யெகோவாவால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். ஏசா 38:7-8லூக் 11:29-30மத் 16:1-4மாற் 8:11-12 அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான். 2இராஜா 2:102இராஜா 3:18ஏசா 49:6யோவா 14:12மாற் 9:28-29 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார். ஏசா 38:82 நாளாக 32:24யோசு 10:12-141 இராஜா 17:20-211 இராஜா 18:36-382 நாளாக 32:31அப் 9:40யாத் 14:15

பாபிலோனிலிருந்து வந்த பிரதிநிதிகள்

அக்காலத்திலே பலாதானின் மகனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். 2 நாளாக 32:31ஏசா 39:1-82 சாமு 10:22 சாமு 8:10ஆதி 10:10ஆதி 11:9ஏசா 13:1ஏசா 13:19 எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை. 1 இராஜா 10:101 இராஜா 10:151 இராஜா 10:21 இராஜா 10:252 நாளாக 32:25-27பிரச 7:20ஏசா 39:2நீதி 23:5 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். 2 நாளாக 16:7-102 நாளாக 25:15-162 நாளாக 25:7-92இராஜா 5:25-262 சாமு 12:7-15ஆமோ 7:12-13உபா 28:49ஏசா 13:5 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான். 2இராஜா 20:131 யோவா 1:8-10யோபு 31:33நீதி 28:13யோசு 7:19 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும். 1 இராஜா 22:192இராஜா 7:1ஆமோ 7:16ஏசா 1:10 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 2இராஜா 24:132 நாளாக 36:10எரே 27:21-22எரே 52:17-192இராஜா 25:13-152 நாளாக 36:18லேவி 26:19 நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான். 2 நாளாக 33:112இராஜா 24:12தானி 1:32இராஜா 25:6 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். 1 சாமு 3:18எஸ்த 9:30எரே 33:6யோபு 1:21புலம் 3:22புலம் 3:39லேவி 10:3லூக் 2:10 எசேக்கியாவின் மற்ற செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் வாய்க்காலையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரச்செய்ததும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நெகே 3:162 நாளாக 32:322 நாளாக 32:42 நாளாக 32:30ஏசா 22:9-111 இராஜா 14:191 இராஜா 15:231 இராஜா 15:7 எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான். 2 நாளாக 32:331 இராஜா 11:431 இராஜா 14:311 இராஜா 2:102 நாளாக 26:232இராஜா 21:12இராஜா 21:18