சங்கீதங்கள் 76

Psalms 76
சங்கீதம் 76

அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.

யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; அப் 17:23தானி 4:1-21 நாளாக 29:10-12தானி 3:29உபா 4:7-8சங் 4:1சங் 48:1-3சங் 98:2-3

இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.

சாலேமில் அவருடைய கூடாரமும், ஆதி 14:18ஏசா 12:62 நாளாக 6:6சங் 132:13-14எபி 7:1-2புலம் 2:6சங் 27:5சங் 9:11

சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.

அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், சங் 46:9எசேக் 39:3-4எசேக் 39:9-10ஏசா 37:35-362 நாளாக 14:12-132 நாளாக 20:252 நாளாக 32:21

கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)

மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். எசேக் 19:1-4தானி 7:17-28தானி 7:4-8எசேக் 19:6எசேக் 38:12-13எரே 4:7

தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நாகூ 3:18சங் 13:3ஏசா 46:12எரே 51:39தானி 4:37எசேக் 30:21-25ஏசா 31:8ஏசா 37:36

உறங்கி அசந்தார்கள்;

வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.

யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் யாத் 15:1யாத் 15:21சங் 80:16யாத் 14:27-28யாத் 15:10எசேக் 39:201 சாமு 26:122 சாமு 10:18

இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

நீர், நீரே, பயங்கரமானவர்; நாகூ 1:6சங் 2:12சங் 89:7வெளி 14:71 நாளாக 16:251 கொரி 10:22எஸ்றா 9:15எரே 10:7-10

உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், 2 நாளாக 20:29-30ஆப 2:20சகரி 2:131 நாளாக 16:302 நாளாக 32:20-22யாத் 19:10எசேக் 38:20-23நியாயாதி 5:20

தேவனே நீர் எழுந்தருளினபோது,

வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; மத் 5:5செப்ப 2:3ஏசா 11:4சங் 9:7-91 பேது 3:4எரே 5:28சங் 149:4சங் 25:9

பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)

மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; ரோம 9:17அப் 4:26-28தானி 3:19-20மத் 24:22அப் 12:3-19யாத் 15:9-11யாத் 18:11யாத் 9:16-17

மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; பிரச 5:4-6சங் 50:14சங் 68:29ஆதி 31:42எண் 30:2சங் 89:72 நாளாக 32:22-23உபா 16:16

அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.

பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; செப்ப 3:6ஏசா 13:6-8சங் 68:122 நாளாக 32:21ஏசா 24:21சங் 2:5வெளி 6:15சங் 2:10

பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.