தாவீதின் பாடல்.
யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். சங் 143:8சங் 86:4சங் 24:41 சாமு 1:15புலம் 3:41
என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், ரோம 10:11சங் 41:11சங் 22:5சங் 71:1ரோம 5:5சங் 142:6ஏசா 37:35சங் 31:1
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;
என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; புலம் 3:25ஏசா 40:31ஏசா 49:23மீகா 7:7சங் 62:5சங் 27:14ரோம 8:25சங் 37:34
காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; சங் 86:11சங் 143:8சங் 27:11சங் 119:27யாத் 33:13சங் 5:8எரே 6:16ஏசா 2:3
உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீதி 8:34ஏசா 30:18சங் 25:10சங் 43:3-4யோவா 14:26யோவா 16:13சங் 88:1ஏசா 54:13
நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன்,
உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், கொலோ 3:12லூக் 1:50சங் 103:172 கொரி 1:3லூக் 1:78யாத் 34:6மீகா 7:18-201 யோவா 3:17
அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.
என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; ஏசா 43:25ஏசா 38:17எபி 10:16-18எபி 8:12எரே 3:25யோபு 13:26எபே 1:6-7எபே 2:4-8
யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; யாக் 1:5எபே 1:17-18சங் 32:8யோவா 6:44-45சங் 92:15மத் 9:13ஏசா 26:7மத் 11:29-30
ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, நீதி 3:5-6சங் 23:3மத் 5:5யோவா 14:61 பேது 3:15கலா 5:23எசேக் 36:27சங் 149:4
சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, யாக் 5:11ரோம 8:28எபி 8:8-12சங் 40:11யோவா 1:17சங் 103:17-18சங் 119:75-76ரோம 2:13
அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.
யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; 1 யோவா 2:12சங் 79:9ஏசா 43:25சங் 31:3ரோம 5:20-21எசேக் 20:9எசேக் 36:22ஏசா 48:9
உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.
யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ சங் 37:23சங் 32:8யோவா 7:17பிரச 12:13சங் 111:10ஏசா 50:10யோவா 8:31-32யோவா 3:20-21
அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; சங் 37:11நீதி 1:33நீதி 19:23அப் 2:39ஏசா 65:23சங் 37:26செப்ப 3:17எசேக் 34:25-28
அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.
யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; யோவா 15:15யோவா 14:21-23யோவா 7:17எபே 1:9எபே 1:181 கொரி 2:14வெளி 2:17எரே 31:31-34
அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; சங் 141:8சங் 124:7-8சங் 31:4சங் 121:1-2சங் 123:2எரே 5:262 தீமோ 2:25-26
அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; சங் 86:16தானி 9:17மீகா 7:19சங் 143:4சங் 69:14-20மாற் 15:33-35சங் 60:1சங் 88:15-18
நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; சங் 107:62 கொரி 4:8-9சங் 34:191 கொரி 4:11-13ஆப 3:17-19சங் 38:1-8சங் 42:7சங் 77:2-4
என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.
என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, 2 சாமு 16:12சங் 119:1321 சாமு 1:11புலம் 5:1மத் 9:2சங் 32:1-5சங் 51:8-9லூக் 1:25
என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
என்னுடைய எதிரிகளைப் பாரும்; லூக் 22:2லூக் 23:5சங் 140:1சங் 140:11சங் 140:4சங் 143:3சங் 27:12சங் 3:1-2
அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; சங் 121:7சங் 71:1-2யோவே 2:26-27சங் 17:8சங் 86:2அப் 7:59லூக் 23:46சங் 22:20-21
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.
உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நீதி 11:3சங் 41:12அப் 24:16நீதி 20:7சங் 26:1சங் 26:111 சாமு 26:23சங் 7:8
நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும். சங் 130:8சங் 122:6சங் 14:7சங் 51:18-19