எத்திரோ மோசேயை சந்தித்தல்
தேவன் மோசேக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கும் செய்த யாவையும், யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததையும், மீதியானில் ஆசாரியனாக இருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது, யாத் 2:16யாத் 3:1சங் 77:14-15அப் 14:27அப் 7:35-36கலா 1:23-24ஏசா 63:11-13யோசு 2:10 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினால் திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவனுடைய மனைவியாகிய சிப்போராளையும், யாத் 2:21யாத் 4:25-26 அவளுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு பயணப்பட்டான். “நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன்” என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் 1 என்று பெயரிட்டிருந்தான். யாத் 2:22அப் 7:29யாத் 4:20எபி 11:13சங் 39:121 பேது 2:11 “என்னுடைய பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார்” என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் 2 என்று பெயரிட்டிருந்தான். 2 கொரி 1:8-102 தீமோ 4:17அப் 12:11எபி 13:61 நாளாக 23:15தானி 6:22யாத் 2:15ஏசா 50:7-9 மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் மகன்களோடும் அவனுடைய மனைவியோடும், அவன் முகாமிட்டிருந்த தேவனுடைய மலையினிடத்தில் வனாந்திரத்திற்கு வந்து: யாத் 3:1யாத் 3:121 இராஜா 19:8யாத் 19:11யாத் 19:20யாத் 24:16-17 “எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளுடன் அவளுடைய இரண்டு மகன்களும் உம்மிடம் வந்திருக்கிறோம்” என்று மோசேக்குச் சொல்லி அனுப்பினான். அப்பொழுது மோசே தன்னுடைய மாமனுக்கு எதிராகப்போய், அவனை வணங்கி, முத்தம்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்திற்குள் நுழைந்தார்கள். ஆதி 29:131 இராஜா 2:192 சாமு 11:7ஆதி 14:17ஆதி 18:2ஆதி 19:1அப் 20:37அப் 28:15 பின்பு மோசே யெகோவா இஸ்ரவேலுக்காக பார்வோனுக்கும் எகிப்தியர்களுக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு சம்பவித்த எல்லா வருத்தத்தையும், யெகோவா தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன்னுடைய மாமனுக்கு விவரித்துச் சொன்னான். நெகே 9:32நெகே 9:9-15எண் 20:14சங் 106:10சங் 107:2சங் 145:4-12சங் 78:42-43சங் 81:7 யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு: 1 கொரி 12:26ரோம 12:15ஏசா 66:10ரோம 12:10ஏசா 44:23 “உங்களை எகிப்தியர்களின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியர்களுடைய கையின் கீழ் இருந்த மக்களை விடுவித்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம். 2 சாமு 18:28ஆதி 14:20லூக் 1:681 இராஜா 8:151 பேது 1:31 தெச 3:9எபே 1:3சங் 106:47-48 யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி; சங் 95:3யாத் 15:112 நாளாக 2:5லூக் 1:51சங் 135:51 நாளாக 16:25தானி 4:37சங் 97:9 மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்கதகனபலியையும் மற்ற பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர்கள் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் சாப்பிட்டார்கள். உபா 12:7ஆதி 31:54யாத் 24:11யாத் 24:51 நாளாக 29:21-221 கொரி 10:181 கொரி 10:211 கொரி 10:31
நியாயதிபதிகள் நியமிக்கபட்டார்கள் (உபாகமம் 1:1-18)
மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள். ஏசா 16:5நியாயாதி 5:10யோபு 29:7யோவே 3:12மத் 23:2ரோம 12:8ரோம 13:6 மக்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: “நீர் மக்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் தனியாக உட்கார்ந்திருக்கவும், மக்கள் எல்லோரும் காலை துவங்கி மாலைவரை உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது ஏன்” என்றான். அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: “தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள். எண் 15:34எண் 27:5உபா 17:8-13யாத் 18:19-20லேவி 24:12-14எண் 9:6எண் 9:8 அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான். யாத் 24:141 கொரி 6:12 சாமு 15:3உபா 4:5உபா 5:11 சாமு 12:231 தெச 4:1-2அப் 18:14-15 அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது. எண் 11:14-17அப் 6:1-42 கொரி 12:15பிலி 2:301 தெச 2:8-9உபா 1:9-12 இப்பொழுது என்னுடைய சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடு இருப்பார், நீர் தேவசந்நிதியிலே மக்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடம் கொண்டுபோய்; எண் 27:5உபா 5:5யாத் 20:19யாத் 3:12ஆதி 39:22 சாமு 14:17உபா 20:1யாத் 18:15 கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். உபா 5:1சங் 143:8உபா 1:18உபா 4:1உபா 4:5சங் 32:8யாத் 18:161 சாமு 12:23 மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும். அப் 6:32 நாளாக 19:5-10உபா 1:13-17உபா 16:18-192 சாமு 23:31 சாமு 8:31 தீமோ 3:32 பேது 2:14-15 அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும். எண் 11:17உபா 1:17-18யாத் 18:26லேவி 24:11எண் 15:33எண் 27:2எண் 36:1உபா 17:8-9 இப்படி நீர் செய்வதும், இப்படி தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே சுமக்கமுடியும்; இந்த மக்கள் எல்லோரும் தாங்கள் போகும் இடத்திற்குச் சுகமாகப் போய்ச் சேரலாம்” என்றான். 1 சாமு 8:6-7யாத் 18:181 சாமு 8:222 சாமு 18:3ஆதி 18:33ஆதி 21:10-122 சாமு 19:392 சாமு 21:17 மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். 1 கொரி 12:21யாத் 18:19யாத் 18:2-5எஸ்றா 10:2எஸ்றா 10:5நீதி 1:5 மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான். உபா 1:15யாத் 18:21அப் 6:5 அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள். யாத் 18:221 இராஜா 10:11 இராஜா 3:16-28உபா 17:8யாத் 18:14-15யோபு 29:16 பின்பு மோசே தன்னுடைய மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான். எண் 10:29-30நியாயாதி 19:9ஆதி 24:59ஆதி 31:55