1 பேதுரு 1

1 Peter 1
அத்தியாயம் 1

இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், யாக் 1:1அப் 2:5-11எபே 2:19எபி 11:131 பேது 2:11அப் 8:4யோவா 11:52மத் 24:22 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, இயேசுகிறிஸ்துவிற்கு கீழ்ப்படிவதற்காகவும், அவருடைய இரத்தம் தெளிக்கப்படுவதற்காகவும் தெரிந்துகொள்ளப்பட்ட அந்நியர்களாக இருப்பவர்களுக்கு எழுதுகிறதாவது: கிருபை உங்களோடு இருந்து, உங்களுடைய சமாதானம் பெருகட்டும். 2 தெச 2:13எபே 1:4-5எபி 12:241 பேது 1:22ரோம 11:2அப் 2:23யோவா 15:16-192 பேது 1:2

ஜீவனுள்ள நம்பிக்கைக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 1 பேது 1:231 யோவா 5:4ரோம 15:13தீத் 3:4-6எபே 1:72 கொரி 1:31 யோவா 3:3ரோம 12:12 தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார். வெளி 21:27எபி 9:151 பேது 5:42 தீமோ 4:8கொலோ 1:5மத் 25:34எபே 1:11எபே 1:18 கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பிலி 1:6எபே 2:82 தெச 2:13-14ரோம 8:31-39யோபு 19:25யோவா 10:28-301 பேது 1:13எபி 9:28 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். யாக் 1:21 பேது 5:10ரோம 12:12ரோம 5:2மத் 5:12ஏசா 61:3யோவா 16:33யோவா 16:22 அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும். யோபு 23:10யாக் 1:12ஏசா 48:101 பேது 4:12யாக் 1:3-4சகரி 13:9நீதி 17:3ரோம 2:7 நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து, யோவா 20:292 கொரி 5:7ரோம 15:13எபி 11:1யோவா 16:222 கொரி 4:181 பேது 1:61 பேது 5:4 உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ரோம 6:22யாக் 1:21எபி 11:13 உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்; மத் 13:17லூக் 10:24தானி 2:44லூக் 24:25-27அப் 10:43அப் 7:52யோவா 5:39சகரி 6:12 தங்களுக்குள் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவிற்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்பு வரும் மகிமைகளையும் முன்னமே அறிவித்தபோது, இந்தக் காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் என்ன என்பதையும் ஆராய்ந்தார்கள். 2 பேது 1:21ஏசா 52:13-14லூக் 24:25-27ரோம 8:9அப் 26:22-23ஏசா 53:1-12சகரி 14:9ஆதி 3:15 தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள். யோவா 15:261 கொரி 2:10எபே 3:101 பேது 1:25எபி 11:39-40எபி 4:2மாற் 16:152 கொரி 1:22

பரிசுத்தமாக இருங்கள்

ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள். 1 பேது 5:8லூக் 12:351 பேது 4:7எபி 9:281 பேது 3:151 யோவா 3:3தீத் 2:11-131 தெச 5:6-8 நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து, ரோம 12:2தீத் 3:3-51 பேது 4:2-3எபே 2:21 தெச 4:5கொலோ 3:5-7எபே 4:18-22அப் 17:30 உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். மத் 5:482 கொரி 7:1எபி 12:14யாக் 3:13எபே 5:1-21 யோவா 3:3பிலி 2:15-161 தெச 4:3-7 நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே. லேவி 11:44லேவி 19:2லேவி 20:7ஆமோ 3:3 அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள். அப் 10:34-352 நாளாக 19:72 கொரி 7:1பிலி 2:12மத் 6:9எபி 12:28எரே 3:19எபே 1:17 உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல், 1 கொரி 6:20தீத் 2:141 கொரி 7:23சங் 49:7-8கலா 1:4எபே 4:17ரோம 1:211 பேது 1:7 குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. 1 யோவா 1:71 பேது 2:22-24யோவா 1:29எபி 9:12-14வெளி 5:9யாத் 12:5யோவா 1:36கொலோ 1:14 அவர் உலகம் உருவாவதற்கு முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்து, தமது மூலமாக தேவன்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். எபே 1:42 தீமோ 1:9-10எபி 9:26வெளி 13:8எபி 1:2தீத் 1:2-3கொலோ 1:26எபே 3:11 உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். அப் 2:24எபி 2:9யோவா 12:44அப் 2:32-33எபி 7:251 பேது 1:111 பேது 3:22எபே 1:15 ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்; 1 தீமோ 1:5எபி 13:1ரோம 12:9-101 பேது 3:81 யோவா 4:12யோவா 13:34-351 யோவா 4:7யாக் 4:8 அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. 1 பேது 1:3எபி 4:12யோவா 1:13யோவா 3:3யோவா 6:631 கொரி 15:53-541 யோவா 5:18யாக் 1:18

மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், ஏசா 40:6-8சங் 103:15யாக் 4:14யாக் 1:10-11சங் 37:22இராஜா 19:261 யோவா 2:17சங் 129:6

மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது;

புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. ஏசா 40:8மத் 5:181 கொரி 15:1-4சங் 119:891 யோவா 1:12 பேது 1:19யோவா 1:1லூக் 16:17