யோவான் 15

John 15
அத்தியாயம் 15

திராட்சைச்செடியும் கொடிகளும்

நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர். எரே 2:21ஏசா 27:2-31 கொரி 3:9ஏசா 60:21சங் 80:8-19ஏசா 4:2யோவா 6:55ஏசா 5:1-7 என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார். மத் 3:10எபி 12:10-11மத் 15:13வெளி 3:19யோவா 15:8லூக் 13:7-9எபி 6:7-8மத் 13:12 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள். யோவா 17:17எபே 5:261 பேது 1:22யோவா 13:10 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். 1 யோவா 2:6கலா 2:20யோவா 8:312 யோவா 1:9யோவா 6:56யோவா 15:5-7பிலி 1:111 யோவா 2:24-28 நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. பிலி 4:13கொலோ 1:10யோவா 15:16கலா 5:22நீதி 11:302 கொரி 13:8யோவா 5:19யாக் 1:17 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். மத் 7:19எபி 6:7-8மத் 13:41யோவா 15:2மத் 3:102 பேது 2:20எபி 10:271 யோவா 2:19 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். சங் 37:41 யோவா 5:14யோவா 14:131 யோவா 3:22யோவா 15:16மத் 7:7யோவா 16:23கலா 5:16 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீடராக இருப்பீர்கள். மத் 5:16யோவா 8:31பிலி 1:112 கொரி 9:10-15யோவா 15:5சங் 92:12-151 பேது 4:11யோவா 13:35 பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். யோவா 17:23-24யோவா 17:261 யோவா 2:28யோவா 15:13வெளி 1:5யோவா 15:11எபே 3:18யூதா 1:20 நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். யோவா 14:151 யோவா 5:31 யோவா 3:21-241 யோவா 2:52 பேது 2:211 யோவா 2:1-2யோவா 4:34யோவா 8:29 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். ரோம 15:13யோவா 17:13யோவா 16:241 யோவா 1:41 பேது 1:8யோவா 16:332 யோவா 1:121 தெச 5:16 நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது. 1 யோவா 4:211 பேது 4:8யோவா 13:34எபே 5:2ரோம 12:101 யோவா 3:231 பேது 3:81 பேது 1:22 ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை. யோவா 10:11எபே 5:2ரோம 5:6-8யோவா 10:151 யோவா 4:7-11 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள். மத் 12:501 யோவா 5:3யாக் 2:23யோவா 14:21யோவா 14:15யோவா 13:17லூக் 12:4ஏசா 41:8 இனி நான் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை, வேலைக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை நண்பர்கள் என்றேன், ஏனென்றால், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். சங் 25:141 கொரி 2:9-12மத் 13:11யாக் 2:23கொலோ 1:26வெளி 1:1ஆதி 18:17-19எபே 3:5 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கும்படி நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்களுடைய கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். எரே 1:5-7யோவா 15:19எபே 2:102 தீமோ 3:15-171 யோவா 4:19கலா 1:15லூக் 6:13அப் 22:14 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். யோவா 15:121 யோவா 3:14-171 பேது 2:17

உலகத்தினால் பகைக்கப்படுதல்

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 1 யோவா 3:13யோவா 7:7லூக் 6:22யோவா 3:20மாற் 13:13மத் 10:221 யோவா 3:1மத் 5:11 நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 1 யோவா 4:4-5யோவா 17:14-16எபே 1:4-11தீத் 3:3-71 யோவா 5:19-20எபே 2:2-5யோவா 15:161 பேது 2:9-12 வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள். 2 தீமோ 3:12யோவா 13:16மத் 10:24எசேக் 3:71 கொரி 4:122 கொரி 4:9அப் 4:27-30ஏசா 53:1-3 அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். மத் 10:22யோவா 16:3யோவா 8:19மத் 10:18மத் 24:91 பேது 4:13-14அப் 5:41ஏசா 66:5 நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. யோவா 9:41யாக் 4:17அப் 17:30ரோம 1:20யோவா 12:48எசேக் 33:31-331 பேது 2:16எபி 6:4-8 என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 1 யோவா 2:232 யோவா 1:9யோவா 8:40-42 வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள். யோவா 14:9யோவா 5:36யோவா 10:32யோவா 10:37யோவா 7:31யோவா 9:32உபா 5:9எபி 2:3-4 காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது. சங் 109:3சங் 69:4சங் 35:19லூக் 24:442 கொரி 11:72 தெச 3:8கலா 2:21யோவா 10:34 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். யோவா 14:26யோவா 14:16-17யோவா 16:13-15அப் 5:32அப் 2:32-33அப் 15:81 யோவா 5:6-10லூக் 24:49 நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள். 1 யோவா 4:14அப் 10:39-42யோவா 21:24லூக் 24:481 யோவா 1:1-2அப் 23:11லூக் 1:2-31 பேது 5:1