எபிரெயர் 2

Hebrews 2
அத்தியாயம் 2

கவனிக்கவேண்டுமென எச்சரிப்பு

எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும். லூக் 8:152 பேது 1:12-13நீதி 7:1-2நீதி 2:1-6உபா 4:9எபி 1:1-22 பேது 3:12 பேது 1:15 ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப் 7:53கலா 3:19எபி 10:28யூதா 1:5உபா 27:26உபா 17:12உபா 17:5உபா 4:3-4 முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், எபி 10:28-29எபி 12:25எபி 5:9அப் 4:121 பேது 4:17-18எசேக் 17:15ரோம 2:3எபி 1:2 அற்புதங்களினாலும், அதிசயங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய விருப்பத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன்தாமே சாட்சி கொடுத்ததுமாக இருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலை இல்லாமல் இருப்போம் என்றால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். அப் 14:3எபே 1:5மாற் 16:201 கொரி 12:4-11எபே 4:8-11ரோம 15:18-19அப் 19:11-12யோவா 4:48

இயேசு அவருடைய சகோதரர்களைப்போல மாற்றப்பட்டார்

இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. வெளி 11:152 பேது 3:13எபி 6:5 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? சங் 8:4-8சங் 144:3யோபு 7:17-18ஏசா 51:12யோபு 15:14யோபு 25:6எபி 4:41 பேது 1:11 அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து, எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். சங் 8:5பிலி 2:6-7 எல்லாவற்றையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற காரியத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றும் இல்லை; ஆனால், இன்னும் எல்லாம் அவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. யோவா 13:31 கொரி 15:27சங் 8:61 பேது 3:22தானி 7:141 கொரி 15:24-25எபே 1:21-22பிலி 2:9-11 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம். பிலி 2:7-9வெளி 5:91 யோவா 2:21 யோவா 4:9-10ரோம 5:18அப் 2:332 கொரி 5:15யோவா 3:16 ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது. ரோம 11:36கொலோ 1:16-17எபி 5:8-91 கொரி 8:6அப் 5:31எபி 12:2எபி 6:20லூக் 24:26 எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: எபி 10:10ரோம 8:29எபி 10:14எபி 13:12யோவா 20:17மத் 12:48-50யோவா 17:19யோவா 17:21 உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; சங் 22:22சங் 40:10யோவா 18:20சங் 111:1சங் 22:25 நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். ஏசா 8:17-18ஏசா 12:2சங் 91:2ஆதி 48:9யோவா 10:291 கொரி 4:152 சாமு 22:3ஆதி 33:5 எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், 2 தீமோ 1:10ரோம 8:3கொலோ 2:151 கொரி 15:54-57யோவா 1:14ஓசி 13:14ஏசா 25:8யோவா 12:31-33 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார். ரோம 8:152 தீமோ 1:7லூக் 1:74-752 கொரி 1:10சங் 55:4ரோம 8:211 கொரி 15:50-57சங் 89:48 எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார். கலா 3:29கலா 3:16ரோம 4:16-25ஆதி 22:18எபி 12:10எபி 6:16ரோம 2:251 பேது 1:20 அன்றியும், அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது. எபி 4:14பிலி 2:7-8எபி 2:14ரோம 5:102 கொரி 5:18-21எபி 7:26தானி 9:24எபி 2:11 எனவே, அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகள்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார். 1 கொரி 10:13எபி 4:15-16எபி 7:25-26யூதா 1:24எபி 5:22 தீமோ 1:12வெளி 3:102 பேது 2:9