சங்கீதங்கள் 111

Psalms 111
சங்கீதம் 111

அல்லேலூயா, சங் 138:1சங் 149:1சங் 106:1சங் 109:30சங் 108:3சங் 35:18சங் 40:9-101 நாளாக 29:10-20

செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், சங் 104:24நீதி 24:14சங் 139:14சங் 143:5எபே 1:19எரே 32:17-19வெளி 15:3எபே 2:7-10

அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.

அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, சங் 145:4-5சங் 145:10-12எபே 3:10வெளி 5:12-14சங் 119:142எபே 1:6-8யாத் 15:11ஏசா 51:8

அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், சங் 103:8ஏசா 63:7எபே 1:6-8சங் 145:8சங் 86:5உபா 31:19-301 கொரி 11:24-26சங் 112:4

யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.

தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; சங் 105:8லூக் 1:72தானி 9:4மத் 6:26-33நெகே 1:5சங் 106:45சங் 89:34ஏசா 33:16

தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.

தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், சங் 2:8சங் 80:8யோசு 10:13-14சங் 44:2யோசு 3:14-17யோசு 6:20சங் 78:12-72சங் 105:27-45

தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; சங் 19:7சங் 89:14உபா 32:4சங் 105:8சங் 119:151சங் 119:160சங் 98:3வெளி 15:3-4

அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், மத் 5:18சங் 19:9ஏசா 40:8வெளி 15:3ரோம 7:12சங் 119:127-128ரோம 3:31

அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.

அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, சங் 99:3லூக் 1:49லூக் 1:68தீத் 2:14வெளி 5:9எபி 13:20எபி 9:12உபா 28:58

தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்;

அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; நீதி 1:7நீதி 9:10யோபு 28:28பிரச 12:13உபா 4:6யோவா 5:44யோவா 13:17மத் 25:21

அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு;

அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.