சங்கீதங்கள் 112

Psalms 112
சங்கீதம் 112

அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, சங் 128:1லூக் 1:50ஏசா 50:10சங் 119:47-48சங் 119:35சங் 115:7-13சங் 111:10சங் 145:19

அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.

அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், ஆதி 17:7நீதி 20:7சங் 37:26அப் 2:39சங் 25:13எரே 32:39சங் 102:28ஆதி 22:17-18

செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; நீதி 15:6நீதி 3:16மத் 6:33ஏசா 33:6பிலி 4:18-19சங் 112:91 தீமோ 6:6-82 கொரி 6:10

அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; யோபு 11:17கொலோ 3:12-13சங் 97:11ஏசா 58:101 யோவா 3:7லூக் 6:361 யோவா 2:29எபே 4:32

அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.

இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். சங் 37:21எபே 5:15நீதி 2:20உபா 15:7-10யோவா 6:12பிலி 1:9நீதி 24:30-34சங் 37:25-26

அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதி 10:7எபி 6:10சங் 125:1சங் 62:2சங் 15:5சங் 55:222 பேது 1:5-11மத் 25:34-40

நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; ஏசா 26:3-4நீதி 1:33சங் 57:7சங் 118:6யோவா 14:1நீதி 3:25-26சங் 34:4சங் 118:8-9

அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.

அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; சங் 118:7சங் 31:24சங் 59:10சங் 91:8எபி 13:9நீதி 3:33சங் 92:11சங் 27:14

அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; எபி 13:16சங் 75:102 கொரி 9:9-15யாக் 2:15-161 யோவா 3:16-181 தீமோ 6:18எபி 6:10ஏசா 58:10

அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.

துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, நீதி 10:28சங் 58:7-8யோபு 8:13லூக் 13:28நீதி 11:7சங் 37:12சங் 86:17லூக் 16:23-26

தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்;

துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.