கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல்.
எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, சங் 8:9சங் 113:2-4சங் 57:5சங் 148:13யாத் 15:11சங் 57:10-11யாத் 34:5-7ஆப 3:3
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, மத் 21:162 கொரி 12:9-10ஏசா 40:311 கொரி 1:27சங் 46:10மத் 11:25லூக் 10:21சங் 44:16
தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர்.
உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், ஆதி 1:1சங் 33:6சங் 104:19சங் 111:2சங் 89:11ரோம 1:20யாத் 8:19லூக் 11:20
நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
மனிதனை நீர் நினைக்கிறதற்கும், யோபு 7:17சங் 144:3எபி 2:6-9சங் 146:3லூக் 1:682 நாளாக 6:18ஆதி 21:1சங் 80:17
மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; எபி 2:7எபி 2:9ஆதி 1:26-27எபி 2:16பிலி 2:7-11எபே 1:21சங் 103:4சங் 21:3-5
மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. ஆதி 1:28ஆதி 1:26மத் 28:18எபி 2:8எபே 1:22ஆதி 9:2சங் 110:11 பேது 3:22
ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆதி 2:20
ஆகாயத்துப் பறவைகளையும், ஆதி 1:20-25சங் 148:10யோபு 38:39யோபு 40:15
கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, சங் 8:1யோபு 11:7சங் 104:24உபா 33:26
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!