சங்கீதங்கள் 110

Psalms 110
சங்கீதம் 110

தாவீதின் பாடல்.

யெகோவா என் ஆண்டவரை நோக்கி: எபி 10:12-131 கொரி 15:25லூக் 20:42-43எபி 1:13மாற் 12:35-37எபி 1:3எபே 1:20-22எபி 12:2

நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும்,

நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.

யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; 2 கொரி 10:4-5எரே 48:17மத் 28:18-20சங் 2:8-9சங் 45:5-6சங் 72:81 கொரி 1:23-241 பேது 1:12

நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.

உமது மகத்துவத்தின் நாளிலே நியாயாதி 5:2எபி 13:21தீத் 2:141 தெச 4:7எபே 1:4வெளி 7:92 கொரி 13:42 கொரி 8:1-3

உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்;

அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி எபி 7:17எபி 5:6எபி 7:21ஆதி 14:18எபி 6:20எபி 7:11எபி 7:28எண் 23:19

என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்;

மனம் மாறாமலுமிருப்பார்.

உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர், ரோம 2:5சங் 16:8வெளி 17:12-14வெளி 6:15-17சங் 68:14அப் 2:34-36அப் 7:55-56மாற் 16:19

தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; சங் 68:21ஏசா 2:4யோவா 5:22மீகா 4:3வெளி 19:11ஏசா 42:4வெளி 14:201 சாமு 2:10

எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;

அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

வழியிலே அவர் நதியில் குடிப்பார்; சங் 27:6எபி 2:9-10நியாயாதி 7:5-6மத் 26:421 பேது 1:11யோவா 18:11பிலி 2:7-11ஏசா 53:11-12

ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.