ரோமர் 2

Romans 2
அத்தியாயம் 2

நடுநிலையான தேவனின் நியாயத்தீர்ப்பு

ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். லூக் 6:37ரோம 2:3யோவா 8:7-9ரோம 2:21-23மத் 7:1-5ரோம 1:18-202 சாமு 12:5-7சங் 50:16-20 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். சங் 9:7-8செப்ப 3:5சங் 145:17எரே 12:1சங் 98:92 தெச 1:5-10சங் 96:13வெளி 16:5 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ? நீதி 16:5லூக் 12:14ரோம 1:32மத் 23:331 தெச 5:32 சாமு 10:3தானி 10:19எசேக் 17:15 அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 2 பேது 3:9ஏசா 30:18யாத் 34:6ரோம 9:22-23தீத் 3:4-6எபே 1:18சங் 86:15எபே 1:7 உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. பிரச 12:14ரோம 1:18ரோம 2:2-3எபி 3:152 பேது 3:7யூதா 1:6உபா 32:34ரோம 9:22 தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். சங் 62:12எரே 32:19மத் 16:272 கொரி 5:10எரே 17:10வெளி 20:12வெளி 22:121 கொரி 3:8 சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். 2 தீமோ 4:7-8லூக் 8:151 கொரி 15:582 தீமோ 1:101 பேது 1:7-8வெளி 2:10-11எபி 10:35-36ரோம 6:23 சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும். 1 தீமோ 6:3-42 தெச 1:81 பேது 4:17யோவா 3:18-212 தெச 2:10-12நீதி 13:10வெளி 16:191 கொரி 11:16 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும். 1 பேது 4:17எசேக் 18:4ரோம 1:16ரோம 3:29-302 தெச 1:6அப் 13:46-47அப் 18:5-6அப் 3:26 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும். ஏசா 32:17ஏசா 26:121 பேது 1:7எண் 6:26யாக் 3:13யோபு 22:21லூக் 1:79ரோம 2:7 தேவனிடம் பட்சபாதம் இல்லை. உபா 10:17அப் 10:342 நாளாக 19:7கலா 2:6கலா 6:7-8யோபு 34:19உபா 16:19கொலோ 3:25 எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். 1 கொரி 9:21கலா 3:10அப் 17:30-31கலா 2:16-19ரோம 2:14-16ரோம 7:7-11ரோம 8:32 கொரி 3:7-9 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். யாக் 1:22-251 யோவா 3:7யாக் 2:21-25ரோம 2:25கலா 2:16லூக் 8:211 யோவா 2:29கலா 3:11-12 அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள். ரோம 1:19-20ரோம 2:12ரோம 2:27அப் 17:30அப் 10:35எபே 2:12சங் 147:19-20உபா 4:7 அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள். 2 கொரி 5:112 கொரி 1:12ரோம 1:18-19தீத் 1:151 யோவா 3:19-211 தீமோ 4:2யோபு 27:6ரோம 9:1 என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும். பிரச 12:141 கொரி 4:5அப் 17:31அப் 10:42லூக் 8:17யோவா 5:22-291 பேது 4:5ரோம 14:10-12

யூதர்களும் நியாயப்பிரமாணமும்

நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி, ரோம 2:23மீகா 3:11ஏசா 48:1-2வெளி 2:9யோவா 5:45மத் 3:9ரோம 2:28-29ரோம 9:32 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாக, அவருடைய விருப்பத்தை அறிந்து, நன்மை எது, தீமை எது, என்று தெரிந்துகொள்கிறாயே. 1 தெச 5:21யாக் 4:17உபா 4:8பிலி 1:101 கொரி 8:1-22 தீமோ 3:15-17எபி 5:14யோவா 13:17 நீ உன்னைக் குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும், வெளி 3:17-181 கொரி 4:101 கொரி 8:1-2ஏசா 49:6ஏசா 5:21ஏசா 56:10யோவா 9:34யோவா 9:40-41 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே. 2 தீமோ 3:5தீத் 1:162 தீமோ 1:131 கொரி 3:1ரோம 6:171 பேது 2:2எபி 5:13மத் 11:25 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா? 1 கொரி 9:27மத் 23:3-28லூக் 12:47மீகா 3:11லூக் 11:46தீத் 2:1-7சங் 50:16-21ஆமோ 8:4-6 “விபசாரம் செய்யக்கூடாது” என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையடிக்கலாமா? மல்கி 3:8மத் 12:39அப் 19:37எசேக் 22:11யாக் 4:4எரே 5:7எரே 7:9-10எரே 9:2 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? யாக் 4:16-17ரோம 2:17யோவா 5:45ரோம 3:2ரோம 9:4யாக் 1:22-27எரே 8:8-9யோவா 9:28-29 எழுதியிருக்கிறபடி, “தேவனுடைய நாமம் யூதரல்லாதவர்களுக்குள்ளே உங்கள் மூலமாக அவமதிக்கப்படுகிறதே.” எசேக் 36:20-23ஏசா 52:52 பேது 2:2புலம் 2:15-162 சாமு 12:14தீத் 2:81 தீமோ 6:1தீத் 2:5 நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே. கலா 5:3-6எரே 4:4அப் 7:51கலா 6:15உபா 30:6எரே 9:25-26ரோம 2:23ரோம 2:28 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா? கொலோ 2:111 கொரி 7:18-19ரோம 8:4அப் 10:2-4அப் 10:34-35அப் 11:3-18எபே 2:11ஏசா 56:6-7 சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே? மத் 12:41-422 கொரி 3:6ரோம 2:29ரோம 7:6-8ரோம 8:4அப் 13:22எசேக் 16:48-52கலா 5:14 எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை. கலா 6:15மத் 3:9ரோம 9:6-8வெளி 2:9ஏசா 48:1-2ரோம 4:10-12ஓசி 1:6-91 பேது 3:21 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது. உபா 30:6பிலி 3:3உபா 10:16கொலோ 2:11-12எரே 4:41 தெச 2:41 கொரி 4:51 பேது 3:4