விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும். 1 கொரி 8:7ஏசா 5:21ரோம 14:31 கொரி 8:4வெளி 2:141 கொரி 8:2ரோம 15:141 கொரி 13:1-13 ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை. 1 கொரி 13:121 கொரி 3:18கலா 6:3நீதி 26:121 தீமோ 6:3-41 கொரி 13:8-91 தீமோ 1:5-7நீதி 30:2-4 தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். வெளி 3:8-9யாத் 33:17நாகூ 1:72 தீமோ 2:191 கொரி 2:9கலா 4:9வெளி 2:19யாக் 1:12 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். உபா 4:39எபே 4:61 கொரி 10:19-20உபா 6:41 தீமோ 2:5ஏசா 41:241 கொரி 8:6-7ஏசா 44:24 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும், 2 தெச 2:4கலா 4:8எரே 2:28உபா 10:17எரே 11:13எரே 2:11தானி 5:4யோவா 10:34-35 பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம். ரோம 11:36யோவா 1:3மல்கி 2:10எபி 1:2-3கொலோ 1:16-171 கொரி 8:4எபே 4:5-6அப் 17:28 ஆனாலும், இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுத்தமாக்கப்படுகிறது. 1 கொரி 10:28-29ரோம 14:141 கொரி 8:9-10ரோம 14:22-231 கொரி 1:10-11 உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை. ரோம 14:17எபி 13:91 கொரி 6:13கொலோ 2:20-23 ஆனாலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனர்களுக்கு இடையூறு வராதபடிக்குப் பாருங்கள். கலா 5:13ரோம 14:20-211 பேது 2:162 பேது 2:191 கொரி 10:24ரோம 14:1-21 கொரி 8:12ரோம 14:13-15 எப்படியென்றால், அறிவுள்ளவனாகிய நீ விக்கிரகக் கோவிலிலே சாப்பிடுவதை ஒருவன் பார்த்தால், பலவீனனாக இருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சாப்பிடுவதற்குத் துணிவு கொள்ளுமல்லவா? 1 கொரி 10:28-291 கொரி 10:20-211 கொரி 8:4ரோம 14:231 கொரி 8:1-21 கொரி 8:7ரோம 14:14ஆமோ 2:8 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே. ரோம 14:15ரோம 15:1-31 கொரி 8:131 கொரி 10:33ரோம 14:20-21 இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள். மத் 18:6மத் 25:451 கொரி 12:121 சாமு 19:4-51 சாமு 2:251 சாமு 24:11அப் 9:4-5யாத் 16:8 ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். ரோம 14:212 கொரி 11:292 கொரி 6:31 கொரி 6:121 கொரி 13:51 கொரி 9:19-231 கொரி 10:331 கொரி 9:12