கிறிஸ்துவிற்குள் உயிர்ப்பிக்கப்படுதல்
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார். கொலோ 2:13எபே 2:5-6கொலோ 3:1-4எபே 4:18ரோம 8:2யோவா 5:21யோவா 11:25-261 யோவா 3:14 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். எபே 6:121 யோவா 5:19எபே 2:3யோவா 12:31கொலோ 3:6-7எபே 5:6யோவா 8:441 கொரி 6:11 அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம். தீத் 3:3எபே 4:22கலா 5:16-241 பேது 1:14ரோம 13:141 கொரி 6:9-11சங் 51:5ரோம 6:12 தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 1 பேது 1:3எபே 1:7சங் 86:15தீத் 3:4-7ரோம 5:8எபே 2:7சங் 145:8ரோம 10:12 அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்; ரோம 3:24எபே 2:8ரோம 5:10ரோம 5:8அப் 15:11எபே 2:1ரோம 8:2தீத் 2:11 கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கொலோ 3:1-3எபே 1:3கொலோ 2:12-13ரோம 6:4-5யோவா 17:21-26வெளி 3:20-21யோவா 12:26எபே 1:19-20 கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவரோடு எழுப்பி, உன்னதங்களிலே அவரோடு உட்காரவும் செய்தார். 1 தீமோ 1:16-17தீத் 3:42 தெச 1:12எபே 2:4ஏசா 60:15வெளி 5:9-14எபே 3:5சங் 106:48 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு; ரோம 3:22-26எபே 2:5ரோம 4:16யோவா 1:12-13ரோம 10:17ரோம 10:9-10அப் 16:31யாக் 1:16-18 ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை; 2 தீமோ 1:9ரோம 11:6தீத் 3:3-5ரோம 9:161 கொரி 1:29-31ரோம 3:20ரோம 4:2ரோம 9:11 ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். பிலி 2:13கொலோ 1:10எபி 13:212 கொரி 5:172 கொரி 9:8எபே 4:24பிலி 1:62 தீமோ 3:17
கிறிஸ்துவுக்குள் ஒன்று
எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள், கொலோ 2:11கொலோ 2:13கொலோ 3:11ரோம 2:28-29கலா 6:121 கொரி 12:21 கொரி 6:11கொலோ 1:21 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். கலா 4:8கொலோ 1:211 பேது 1:3எரே 31:31-341 தெச 4:13எபே 4:18எசேக் 37:26யோவா 15:5 முன்னே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள். அப் 2:39கொலோ 1:20-22கொலோ 1:13-14எபே 2:19-221 கொரி 6:11ஏசா 57:19ஏசா 43:6ரோம 3:23-30 எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, கலா 3:28கொலோ 3:15கொலோ 3:11எபே 2:151 கொரி 12:12-13கொலோ 1:20கொலோ 2:10-14ஏசா 9:6-7 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி, கொலோ 2:14கலா 3:10கொலோ 1:21-22எபி 8:13கொலோ 2:20கொலோ 3:10கலா 3:28கலா 6:15 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். கொலோ 1:20-22ரோம 5:102 கொரி 5:18-21கொலோ 2:141 பேது 4:1-2கலா 2:20எபே 2:15ரோம 6:6 அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார். ஏசா 57:19-21அப் 10:36ரோம 5:1அப் 2:39உபா 4:7எபே 2:13-14சங் 148:14சகரி 9:10 அப்படியே நாம் இருகூட்டத்தாரும் ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தை அவர் மூலமாகப் பெற்றிருக்கிறோம். 1 கொரி 12:13எபே 3:12ரோம 5:2எபே 4:4யோவா 14:6எபி 10:19-20யோவா 10:9எபி 4:15-16 ஆகவே, நீங்கள் இனி அந்நியர்களும் பரதேசிகளுமாக இல்லாமல், பரிசுத்தவான்களோடு ஒரே நகரத்தாரும் தேவனுடைய குடும்பத்தினராக இருந்து, பிலி 3:201 யோவா 3:1கலா 3:26-28கலா 6:10எபே 2:12எபே 3:6எபி 11:13எபி 12:22-24 அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாக இருக்கிறார்; 1 பேது 2:4-5ஏசா 28:161 பேது 2:7-8சங் 118:22எபே 4:11-13மத் 16:18வெளி 21:141 கொரி 3:9-11 அவர்மேல் மாளிகை முழுவதும் சீராக இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; 1 கொரி 3:16-171 கொரி 3:92 கொரி 6:16எபே 4:13-161 இராஜா 6:7எபி 3:3-4யாத் 26:1-37எசேக் 42:12 அவர்மேல் நீங்களும் ஆவியானவராலே தேவன் தங்கும் இடமாகச் சேர்த்துக் கட்டப்பட்டுவருகிறீர்கள். 1 பேது 2:4-51 கொரி 3:16யோவா 17:21-231 யோவா 4:161 யோவா 4:13யோவா 14:17-231 கொரி 6:19ரோம 8:9-11