1 பேதுரு 4

1 Peter 4
அத்தியாயம் 4

தேவனுக்காக உயிர்வாழ்தல்

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள். கலா 5:241 பேது 3:18கொலோ 3:3-5ரோம 6:11கலா 2:20ரோம 6:7எபே 6:13எபி 12:3 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான். எபே 4:22-241 பேது 1:14எபே 6:6ரோம 6:11தீத் 3:3-82 கொரி 5:15ரோம 6:2எபே 2:3 கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம். 1 கொரி 6:11எபே 5:181 தெச 4:51 பேது 1:14எபே 2:2-3எபே 4:17-19கலா 5:21எசேக் 45:9 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள். 1 பேது 3:161 பேது 2:12அப் 18:6யூதா 1:10அப் 13:452 பேது 2:122 பேது 2:22லூக் 15:13 உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள். யாக் 5:92 தீமோ 4:1அப் 10:42ரோம 14:10-12யோவா 5:22-23மத் 12:36அப் 17:31யூதா 1:14-15 இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ரோம 8:21 பேது 3:19ரோம 8:9-11யோவா 5:25-26எபே 2:3-5தீத் 3:3-71 பேது 4:1-2கலா 5:25 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள். யாக் 5:8-91 பேது 1:131 பேது 5:82 தீமோ 4:5லூக் 21:34எபி 10:25கொலோ 4:21 தெச 5:6-8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். நீதி 10:12கொலோ 3:14நீதி 17:9யாக் 5:201 பேது 1:221 கொரி 13:11 தெச 3:121 தெச 4:9-10 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். எபி 13:2ரோம 12:13பிலி 2:14எபி 13:161 தீமோ 3:22 கொரி 9:7தீத் 1:8யாக் 5:9 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ரோம 12:6-81 கொரி 12:4-111 கொரி 4:1-2மாற் 10:45எபி 6:101 கொரி 15:101 கொரி 3:10ரோம 15:27 ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 கொரி 10:311 பேது 4:10எபே 6:101 கொரி 12:4எபே 4:291 பேது 2:5அப் 7:38கொலோ 4:6

கிறிஸ்தவனாக இருப்பதினால் வரும் பாடுகள்

பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல், 2 தீமோ 3:121 பேது 1:6-71 பேது 5:91 தெச 3:2-4தானி 11:351 கொரி 10:131 கொரி 3:131 பேது 4:4 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். ரோம 8:17யாக் 1:2-3ரோம 5:3பிலி 3:102 கொரி 1:71 பேது 5:102 கொரி 4:101 பேது 1:5-8 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். 1 பேது 3:14லூக் 6:22மத் 5:111 பேது 3:16யாக் 1:12சங் 146:51 பேது 2:19-202 கொரி 12:10 ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது. 2 தெச 3:111 தெச 4:111 பேது 2:19-201 தீமோ 5:131 பேது 3:172 தீமோ 2:9மத் 5:11 ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும். 1 பேது 3:17-18பிலி 1:291 பேது 4:19யாக் 1:2-42 தீமோ 1:12அப் 5:41எபே 3:13-15பிலி 1:20 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்? எரே 25:292 தெச 1:8ரோம 2:9எசேக் 9:61 பேது 2:8லூக் 12:47-48மல்கி 3:5எபி 12:24-25

“நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், நீதி 11:31எசேக் 18:24லூக் 23:312 பேது 2:5-6யூதா 1:151 கொரி 10:12அப் 14:22எபி 10:38-39

பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?

ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். சங் 37:52 தீமோ 1:121 பேது 3:17சங் 138:8சங் 146:5-61 பேது 4:12-16சங் 31:5ரோம 2:7