தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடு முழுவதும் உள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்: 2 தீமோ 1:1எபே 1:1பிலி 1:1தீத் 1:11 கொரி 16:101 கொரி 6:111 தெச 1:7-81 தீமோ 1:1 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:7எபே 6:23பிலி 1:2பிலே 1:31 நாளாக 12:181 கொரி 1:31 தெச 1:12 தெச 1:2
எல்லாவித ஆறுதலின் தேவன்
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். எபே 1:31 பேது 1:3ரோம 15:5-6மீகா 7:18சங் 86:5தானி 9:9எபே 1:17சங் 86:15 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். 1 தெச 5:112 தெச 2:16-17ஏசா 51:122 கொரி 7:6-7ஏசா 40:1சங் 32:7யோவா 14:18எபி 12:12 எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. கொலோ 1:24பிலி 3:102 தெச 2:16-17பிலி 1:202 கொரி 4:10-11பிலி 2:11 கொரி 4:10-132 கொரி 11:23-30 எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது. 2 தீமோ 2:102 கொரி 4:15-182 கொரி 1:4எபே 3:13பிலி 1:19ரோம 8:282 கொரி 5:52 கொரி 12:15 நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம். ரோம 8:17-182 தெச 1:4-7யாக் 1:121 தெச 1:3-4யாக் 1:2-42 தீமோ 2:121 கொரி 10:132 கொரி 1:14 எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது. 2 கொரி 4:7-121 கொரி 15:321 கொரி 4:81 கொரி 16:9அப் 19:23-351 சாமு 27:11 சாமு 20:3 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம். 2 கொரி 3:52 கொரி 4:7எபி 11:192 கொரி 12:7-10ரோம 4:17-25யோபு 40:14சங் 44:5-7எசேக் 37:1-14 அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம். 1 தீமோ 4:102 பேது 2:9சங் 34:191 சாமு 17:372 தீமோ 4:17ரோம 15:31அப் 26:211 சாமு 7:12 அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள். பிலி 1:192 கொரி 4:15அப் 12:5கொலோ 4:32 தெச 3:1எபி 13:18பிலே 1:22ரோம 15:30-32
பவுலின் பயணமாற்றம்
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது. 1 கொரி 2:132 கொரி 2:17யாக் 3:13-181 தெச 2:101 கொரி 15:101 பேது 3:212 கொரி 12:15-192 கொரி 4:2 ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன். 2 கொரி 4:2பிலே 1:62 கொரி 13:62 கொரி 5:11 கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே. 1 தெச 2:19-20பிலி 2:161 கொரி 1:81 தெச 3:13பிலி 1:10பிலி 4:11 தெச 5:23பிலி 1:6 நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும், ரோம 1:11ரோம 15:291 கொரி 4:191 கொரி 11:342 கொரி 6:1பிலி 1:25-26 பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன். 1 கொரி 16:5-7அப் 19:21-22அப் 21:5 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ? மத் 5:37யாக் 5:122 கொரி 10:2-32 கொரி 1:18-20யோவா 8:15எரே 23:322 கொரி 1:12நியாயாதி 9:4 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. 1 கொரி 1:9வெளி 3:7யோவா 7:28வெளி 3:142 கொரி 1:232 கொரி 11:312 கொரி 2:17யோவா 8:26 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார். எபி 13:82 யோவா 1:9வெளி 1:17வெளி 1:81 யோவா 5:20வெளி 2:18அப் 18:51 யோவா 1:3 எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 1 யோவா 2:24-25கலா 3:22வெளி 7:12எபி 13:8எபே 1:6எபே 1:12-14வெளி 3:14ரோம 11:36 உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. 1 யோவா 2:271 யோவா 2:201 பேது 5:10ரோம 8:9ஏசா 61:12 தெச 3:3ஏசா 9:72 கொரி 5:5 அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார். எபே 4:302 கொரி 5:5எபே 1:13-14யோவா 6:27ரோம 8:14-16வெளி 9:4ரோம 8:23ரோம 8:9 மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன். கலா 1:201 கொரி 4:212 கொரி 13:102 கொரி 13:2ரோம 1:92 கொரி 10:6-112 கொரி 12:20பிலி 1:8 உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம். 1 பேது 5:31 கொரி 15:12 தீமோ 2:24-262 கொரி 4:5பிலி 1:25-26ரோம 5:2மத் 23:8-10மத் 24:49