ஏசாயா 40

Isaiah 40
அத்தியாயம் 40

தேவனுடைய மக்களுக்கு கிடைக்கும் ஆறுதல்

என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2 கொரி 1:4ஏசா 51:12ஏசா 51:3செப்ப 3:14-171 தெச 4:18எரே 31:10-14சகரி 1:13ஏசா 49:13-16 எருசலேமுடன் ஆதரவாகப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியானது என்றும், அது தன் சகல பாவங்களுக்காக யெகோவாவின் கையில் இரட்டிப்பாக அடைந்து முடிந்தது என்றும், அதற்குச் சொல்லுங்கள் என்று உங்கள் தேவன் சொல்கிறார். சகரி 9:12ஏசா 61:7ஓசி 2:14எரே 33:8-9வெளி 18:6ஏசா 43:25ஏசா 44:22எரே 16:18 யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும், மல்கி 3:1மாற் 1:2-5யோவா 1:23மத் 3:1-3லூக் 1:16-17லூக் 1:76-77மல்கி 4:5-6ஏசா 57:14 பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், லூக் 3:5எசேக் 21:26லூக் 18:14ஏசா 42:15-16ஏசா 45:2எசேக் 17:24யோபு 40:11-13ஏசா 2:12-15 யெகோவாவின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாகக் காணும், யெகோவாவின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டானது. ஆப 2:14ஏசா 52:10யோவே 2:282 கொரி 4:6லூக் 3:6ஏசா 60:1அப் 2:17ஏசா 11:9 பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. 1 பேது 1:24-25சங் 103:15-16யாக் 1:10-11சங் 102:11யோபு 14:2ஏசா 58:1சங் 90:5-6சங் 92:7 யெகோவாவின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; மக்களே புல். யோபு 41:21 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது. மாற் 13:31மத் 24:351 பேது 1:25சங் 119:89-91மத் 5:18ஏசா 55:10-11ஏசா 46:10-11யோவா 10:35 சீயோனுக்கு சுவிசேஷம் கொண்டுவருகிறவளே, நீ உயர்ந்த மலையில் ஏறு; எருசலேமுக்கு வரும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. ஏசா 52:7-8எபே 6:19ஏசா 12:2ஏசா 25:9ஏசா 61:1அப் 2:141 யோவா 5:20-211 பேது 3:14 இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்திற்கு முன்பாகச் செல்கிறது. வெளி 22:12ஏசா 62:11வெளி 17:14மத் 28:18ஏசா 49:4ஏசா 9:6-7பிலி 2:10-11யோவா 12:15 மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாக நடத்துவார். வெளி 7:17சங் 23:1-6மீகா 5:4எசேக் 34:23யோவா 10:11-161 பேது 2:25எசேக் 34:12-14ஏசா 49:9-10 தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் கணக்கிட்டு, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, மலைகளை அளவுகோலாலும், தராசாலும் நிறுத்தவர் யார்? நீதி 30:4எபி 1:10-12யோபு 38:4-11சங் 102:25-26ஏசா 48:13நீதி 8:26-28யோபு 11:7-9யோபு 28:25 யெகோவாவுடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? 1 கொரி 2:16ரோம 11:34யோபு 21:22யோபு 36:22-23லூக் 10:22எபே 1:11யோவா 1:13 தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாருடன் ஆலோசனை செய்தார்? யோபு 21:22கொலோ 2:31 கொரி 12:4-6யாக் 1:17 இதோ, தேசங்கள் வாளியில் வடியும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், கருதப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார். ஏசா 40:22எரே 10:10ஏசா 29:5யோபு 34:14-15ஏசா 11:11ஆதி 10:5ஏசா 41:5தானி 11:18 லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது. மீகா 6:6-7சங் 40:6சங் 50:9-12எபி 10:5-10 சகல தேசங்களும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் கருதப்படுகிறார்கள். சங் 62:9தானி 4:34-35ஏசா 29:72 கொரி 12:11யோபு 25:6 இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? ஏசா 46:51 சாமு 2:2ஏசா 40:25யாத் 15:11அப் 17:29எரே 10:6சங் 89:6யாத் 8:10 உலோக வேலைசெய்பவன் ஒரு சிலையை வார்க்கிறான், கொல்லன் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருத்துகிறான். எரே 10:9யாத் 32:2-4ஆப 2:18-19ஏசா 46:6-7நியாயாதி 17:4சங் 115:4-8ஓசி 8:6ஏசா 2:20 அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சிலையைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான். ஏசா 41:7ஏசா 46:7எரே 10:3-4ஏசா 2:8-9தானி 5:231 சாமு 5:3-4ஏசா 44:13-19 நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா? அப் 14:17ஏசா 46:8ஏசா 48:13சங் 50:6ரோம 1:19-21சங் 115:8ரோம 1:28ஏசா 27:11 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். நீதி 8:27ஏசா 42:5ஏசா 66:1சங் 104:2எரே 10:12யோபு 22:14எபி 1:10-12ஏசா 40:15 அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். யோபு 12:21சங் 107:40ஏசா 34:12எரே 25:18-27ஏசா 19:13-14ஏசா 23:9ஏசா 24:21-22யோபு 34:19-20 அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதும்போது பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும். ஏசா 41:16ஆகா 1:9ஏசா 17:13எரே 23:191 இராஜா 21:21-222இராஜா 10:112 சாமு 22:16ஓசி 13:15 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை சமமாக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்கிறார். ஏசா 40:18உபா 4:15-18உபா 4:33உபா 5:8 உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. கொலோ 1:16-17எரே 32:17-19ஏசா 48:13ஏசா 51:6ஏசா 44:24சங் 147:4-5சங் 89:11-13உபா 4:19 யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி யெகோவாவுக்கு மறைவானது என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ ஏன் சொல்லவேண்டும்? ஏசா 49:4லூக் 18:7-8ஏசா 49:14யோபு 27:2 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. ரோம 11:33-34சங் 147:51 தீமோ 1:17ஏசா 55:8-9பிலி 1:6ஏசா 40:211 கொரி 2:16ஆதி 21:33 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார். ஏசா 41:10பிலி 4:132 கொரி 12:9-10கொலோ 1:11சகரி 10:12எரே 31:25சங் 29:11ஏசா 50:4 இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள். ஆமோ 2:14சங் 34:10சங் 33:16பிரச 9:11ஏசா 13:18ஏசா 9:17எரே 6:11சங் 39:5 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள். புலம் 3:25-262 கொரி 4:16சங் 27:13-14சங் 103:52 கொரி 12:9-10எபி 12:1கலா 6:9ரோம 8:25