தாவீதின் பாடல்.
எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, சங் 79:9-10ஏசா 48:11சங் 96:8எசேக் 20:14எசேக் 36:32எபே 1:6எசேக் 36:22தானி 9:19
உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே சங் 42:3சங் 79:10சங் 42:10யாத் 32:12யோவே 2:17உபா 32:26-27எண் 14:15-162இராஜா 19:10-19
என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; சங் 135:6தானி 4:35ஏசா 46:10எபே 1:11சங் 103:19ரோம 9:19சங் 2:4சங் 123:1
தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், உபா 4:28ஏசா 46:6-7எரே 10:3-5ஏசா 40:19-20ஆப 2:18-20ஏசா 44:10ஏசா 46:1-2அப் 19:26
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; எரே 10:5
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;
அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;
அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;
தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், சங் 135:18ஆப 2:18-19எரே 10:8யோனா 2:8ஏசா 44:9-20
அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; சங் 62:8சங் 37:3நீதி 30:5சங் 118:2-4சங் 135:19-20உபா 33:29சங் 146:5-6சங் 33:20-21
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; சங் 118:3யாத் 28:1எண் 16:40எண் 16:5எண் 18:7
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, நீதி 14:26அப் 10:35நீதி 30:5சங் 103:11சங் 147:11வெளி 19:5சங் 22:23சங் 33:18
யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், எபே 1:3சங் 136:23ஏசா 44:21ஆதி 12:2-3ஏசா 49:14-16சங் 25:7சங் 67:7யாத் 2:24-25
அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,
அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சங் 112:1லூக் 1:50சங் 128:1சங் 128:4-5சங் 29:11வெளி 19:5மல்கி 4:2வெளி 11:18
சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். உபா 1:11அப் 2:39அப் 3:25எரே 33:22ஆதி 17:72 சாமு 24:3ஆதி 13:16எரே 30:19
வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சங் 134:3வெளி 14:7ஆதி 1:1ஆதி 14:19சங் 121:2சங் 96:51 பேது 3:9அப் 14:15
வானங்கள் யெகோவாவுடையவைகள்; சங் 8:6சங் 89:11ஆதி 1:28-30எரே 27:5-6ஆதி 9:1-3உபா 32:8ஏசா 66:1சங் 144:5
பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் சங் 6:5ஏசா 38:18-19சங் 88:10-12சங் 30:9சங் 31:171 சாமு 2:9
யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் சங் 113:2தானி 2:20சங் 145:21வெளி 5:13சங் 145:2சங் 118:17-19
யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.
அல்லேலூயா.