ஆரோகண பாடல்.
யெகோவாவுக்குப் பயந்து, சங் 112:1சங் 119:1சங் 103:13லூக் 1:50அப் 9:31சங் 1:1-3சங் 147:11சங் 127:1
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; ஏசா 3:10ஏசா 62:8ஏசா 65:21-23பிரச 5:18-19உபா 28:4உபா 28:111 கொரி 15:58பிரச 8:12
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் எசேக் 19:10சங் 52:8ஆதி 49:22நீதி 5:15-18ரோம 11:24எரே 11:16ஓசி 14:6-7சங் 127:5
திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்;
உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன்
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; சங் 134:3சங் 20:2ஏசா 33:20சங் 118:26சங் 122:6எபே 1:3ஏசா 2:3சங் 135:21
நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், யோபு 42:16ஆதி 50:23ஏசா 66:12நீதி 17:6சங் 125:5கலா 1:16
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.