இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; நீதி 18:10சங் 138:7சங் 91:14-15சங் 46:11எபி 5:7ஏசா 50:10மத் 26:38-39சங் 46:1
யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, 1 இராஜா 8:44-451 இராஜா 6:162 நாளாக 20:8-9ஏசா 12:6ஏசா 14:32சங் 3:42 சாமு 5:72 சாமு 6:17
சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, 2 நாளாக 7:1சங் 51:19அப் 10:41 நாளாக 21:26எபே 5:2ஆதி 4:41 பேது 2:5ஏசா 60:7
உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, சங் 145:19சங் 37:4மத் 21:22சங் 21:2யோவா 16:23ரோம 8:27-28நீதி 11:231 யோவா 5:14-15
உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; யாத் 17:151 சாமு 1:17சங் 60:4ஏசா 25:9ஆப 3:18ஏசா 61:10ஏசா 12:1-3லூக் 1:47
உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக.
யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் சங் 28:8அப் 5:31சங் 18:50சங் 89:20-23அப் 4:10ஏசா 63:15மத் 6:9சங் 2:2
என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்;
தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து,
தமது பரிசுத்த வானத்திலிருந்து
அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார்.
சிலர் இரதங்களைக்குறித்தும், ஏசா 31:1எரே 17:5நீதி 21:31சங் 33:16-172 நாளாக 32:82 நாளாக 14:112 நாளாக 20:12-20சங் 45:17
சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்;
நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; சங் 125:1மீகா 7:8எரே 17:7-8சங் 34:21-22நியாயாதி 5:31சங் 146:5-9
நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
யெகோவாவே, இரட்சியும்; சங் 5:2சங் 118:25-26சங் 44:4மத் 21:15சங் 74:12மத் 21:9சங் 17:6சங் 2:6-10
நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.