துயரம் மற்றும் உதவி
கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ, நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள். மத் 7:2ஏசா 24:16ஏசா 10:12ஏசா 21:2எரே 25:12-14ஒபதி 1:10-16வெளி 17:172 நாளாக 28:16-21 யெகோவாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்களுடைய புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும். 2 கொரி 1:3-4ஏசா 30:18-19ஏசா 59:16சங் 60:11சங் 62:8யாத் 14:27ஏசா 25:9புலம் 3:25-26 அமளியின் சத்தத்தினாலே மக்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது தேசங்கள் சிதறடிக்கப்படும். ஏசா 10:13-14ஏசா 10:32-34ஏசா 17:12-14ஏசா 37:11-18ஏசா 59:16-18சங் 46:6ஏசா 37:29-36 வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனிதர்கள் அதின்மேல் குதித்துத் திரிவார்கள். 2 நாளாக 14:132 நாளாக 20:25ஏசா 33:23யோவே 2:25யோவே 2:92இராஜா 7:15-16 யெகோவா உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார். ஏசா 2:17தானி 4:37எபே 1:20-21ஏசா 32:15-18வெளி 19:2-6ரோம 11:262 நாளாக 31:20-21யாத் 15:1 பூரண இரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; யெகோவாவுக்குப் பயப்படுதலே உன்னுடைய பொக்கிஷம். சங் 112:1-3நீதி 19:231 தீமோ 4:8மத் 6:33நீதி 14:271 தீமோ 6:6பிரச 7:19ஏசா 11:2-5 இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து பிரதிநிதிகள் மனங்கசந்து அழுகிறார்கள். 2இராஜா 18:182இராஜா 18:37ஏசா 36:22ஏசா 36:3 பாதைகள் பாழாயின; வழிப்போக்கர்கள் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை 1 இகழுகிறான்; மனிதனை மதிக்காமல் போகிறான். நியாயாதி 5:6ஏசா 35:81 சாமு 17:101 சாமு 17:262இராஜா 18:13-172இராஜா 18:20-21ஏசா 10:13-14ஏசா 10:29-31 தேசம் துக்கித்து சோர்வடைந்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்திரத்திற்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது. ஏசா 35:2ஏசா 65:10நாகூ 1:4உபா 3:4ஏசா 1:7-8ஏசா 14:8ஏசா 2:13ஏசா 24:1 இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று யெகோவா சொல்கிறார். சங் 12:5சங் 102:13-18ஆமோ 6:1ஏசா 30:17-18ஏசா 42:13-14ஏசா 59:16-17செப்ப 3:8உபா 32:36-43 பதரைக் கர்ப்பந்தரித்து வைக்கோலைப் பெறுவீர்கள்; நெருப்பைப்போல் உங்கள் சுவாசமே உங்களை சுட்டெரிக்கும். ஏசா 59:4சங் 7:14யாக் 1:15அப் 5:4ஏசா 1:31ஏசா 10:7-14ஏசா 17:13ஏசா 26:18 மக்கள் சுண்ணாம்பைப்போல நீர்த்துப்போவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள். 2 சாமு 23:6-7ஏசா 27:4ஆமோ 2:1ஏசா 10:17ஏசா 37:36ஏசா 9:18 தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார். எபே 2:11-18சங் 48:10தானி 3:27ஏசா 49:11 சாமு 17:46அப் 2:5-11தானி 6:25-27ஏசா 18:3 சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரர்களை நடுக்கம்பிடிக்கிறது; சுட்டெரிக்கும் நெருப்பிற்கு முன்பாக நம்மில் தங்கியிருப்பவன் யார்? நிலையான நெருப்புத்தழலுக்கு முன்பாக நம்மில் குடியிருப்பவன் யார் என்கிறார்கள். எபி 12:29ஏசா 66:24மத் 25:46உபா 5:24-25மத் 18:8மத் 25:41வெளி 14:10ஏசா 29:13 நீதியாக நடந்து, செம்மையானவைகளைப் பேசி, துன்பம் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, லஞ்சங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தம் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் எவனோ, சங் 119:371 யோவா 3:7எபே 5:11-13உபா 16:19ஏசா 56:1-2சங் 1:1-3சங் 106:3சங் 24:4-5 அவன் உயர்ந்த இடங்களில் குடியிருப்பான்; கன்மலைகளின் பாதுகாப்பு அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவனுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். லூக் 12:29-31ஏசா 32:18ஏசா 49:10நீதி 1:33நீதி 18:10சங் 107:41சங் 37:3சங் 90:1 உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும். சகரி 9:171 யோவா 3:22 கொரி 4:18யோவா 14:21ஏசா 6:5யோவா 1:14யோவா 17:242 நாளாக 32:23 உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்காளன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே? 1 கொரி 1:201 சாமு 25:33-361 சாமு 30:62இராஜா 15:192இராஜா 18:142இராஜா 18:31ஆதி 23:16ஏசா 10:16-19 உனக்குப் புரியாத மொழியையும், புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் கொடூர மக்களை இனி நீ பார்க்கமாட்டாய். ஏசா 28:11உபா 28:49-50எரே 5:152இராஜா 19:32யாத் 14:13எசேக் 3:5-61 கொரி 14:21 நம்முடைய பண்டிகைகள் அனுசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமைதலான குடியிருப்பாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை. சங் 46:5ஏசா 32:18ஏசா 54:2உபா 12:5எசேக் 48:35ஏசா 37:33மத் 16:18சங் 125:1-2 மகிமையுள்ள யெகோவா அங்கே நமக்கு மிக அகலமான நதிகளும் ஆறுகளுமுள்ள இடம் போலிருப்பார்; தண்டுவலிக்கிற படகு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை. சங் 46:4-5ஏசா 41:18ஏசா 48:18ஏசா 66:122 கொரி 4:4-6அப் 7:2சங் 29:3 யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர் நம்மை காப்பாற்றுவார். அப் 5:31யாக் 4:12செப்ப 3:15-17ஏசா 12:2ஏசா 25:9ஏசா 35:4சங் 89:18வெளி 19:16 உன் கயிறுகள் தளர்ந்துபோகும்; பாய்மரத்தைப் பலப்படுத்தவும், பாயை விரிக்கவும் முடியாமற்போகும்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையிடுவார்கள். 2இராஜா 7:81 கொரி 1:27சங் 68:121 சாமு 30:101 சாமு 30:22-242 நாளாக 20:252இராஜா 7:16அப் 27:19 வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் குடியிருக்கிற மக்களின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும். எரே 50:20வெளி 21:41 யோவா 1:7-9யாத் 15:26ஏசா 58:8யாக் 5:14எரே 33:6-8ஏசா 44:22